வாக்காளர் பட்டியலில் திமுக எம்.பி. பெயர் நீக்கம்!!
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் அதிமுக அரசு மாபெரும் முறைகேடுகள் செய்திருப்பதால், 40 தொகுதிகளிலும்அந்தப் பட்டியலை திமுக தொண்டர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கழகச் செயலாளர்களிடம் தேர்தல் கமிஷன்அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பட்டியலை சரிபார்த்தபோது, துறைமுகம் தொகுதியில் 29வது வட்டம்கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் 4ம் எண்ணுள்ள வீட்டில் 277 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டிருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
விசாரித்தபோது அந்த வீட்டில் 6 வாக்காளர்கள்தான் இருப்பது தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது 28ம் எண் வீடு வரை உள்ள வாக்காளர்கள் 4ம் எண் வீட்டில் தவறுதலாகசேர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அதேபோல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் 3வது வட்டம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள ஒரு குடிசைவீட்டில் 410 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகசுந்தரத்தின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்துநீக்கியிருக்கிறார்கள். ஆனால் அவரது மனைவி பெயர் மட்டும் உள்ளது. தன் பெயரை பட்டியலில் சேர்க்குமாறுசண்முகசுந்தரம் தற்போது மனு கொடுத்துள்ளார்.
இதுபோல் பல இடங்களில் தி.மு. கழக உறுப்பினர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. எனவே கழகஉடன்பிறப்புகள் வாக்காளர் பட்டியலை 40 தொகுதிகளிலும் சரிபார்க்கும் பணியில் முழுக்கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications