காஞ்சி மடமா? மதுரை ஆதீனமா?
கும்பகோணம்:
சமீப காலமாகவே காஞ்சி மடத்துக்கும் பிற மடங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த மகாமக விழாவின்போது தன்னையும் பிற மடங்களையும் காஞ்சி சங்கராச்சாரியார்புறக்கணித்ததாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் மதுரை ஆதீனம்.
அதே போல மகாமகக் குளத்தில் முதலில் யார் புனித நீராடுவது என்பதிலும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் ஆதீனத்துக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று மகாமகக் குளத்தில் காலை 7 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் நீராடி நிகழ்ச்சியைத்துவக்குவதாக இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களை போலீசார் குளத்தில் இறங்க விடாமல் தடுத்து நிறுத்திவைத்திருந்தனர்.
ஆனால், அதிகாலையில் காரில் அங்கு வந்திறங்கிய மதுரை ஆதீனம் விறுவிறுவென குளத்தில் இறங்கி நீராட ஆரம்பித்தார்.அவரைத் தடுக்க முடியாமல் போலீசார் கையைப் பிசைந்தனர். ஆதீனம் இறங்கியதால் பொது மக்களில் பலரும் உள்ளே இறங்கி 2அடி நீரை கலக்கிவிட்டுவிட்டனர்.
இந்தத் தகவல் சங்கராச்சாரியாருக்குத் தெரிவிக்கப்பட, 7 மணிக்கு வர இருந்தவர் அதை 9 மணிக்கு ஒத்தி வைத்தார். 9 மணிக்குசங்கராச்சாரியார் வந்தபோது கூடவே ஆதீனமும் தனது மடத்தின் ஆட்களுடன் வந்தார்.
அப்போதும் நீர் கலங்கிப் போயிருந்தது. மதுரை ஆதீனத்தின் செயலால் தான் மக்களும் குளத்தில் இறங்கி நீரைக் கலங்கிவிட்டனர்என்று காஞ்சி மடாதிபதியிடம் அவருடன் வந்தவர்கள் கூற, கோபமடைந்த ஆதீனத்தின் ஆதரவாளர்களும் குரல் உயர்த்தினர்.
காஞ்சி மடத்தைவிட எங்கள் மடம் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. இதனால் எங்கள் மடாதிபதி முதலில் நீராடியதில் எந்தத்தவறுமில்லை என்று அவர்கள் பதில் தர அங்கே லேசான பதற்றம் ஏற்பட்டது நினைவு கூறத்தக்கது.
அதே போல புனித மகாமகத் திருநாளின்போது காஞ்சி மடாதிபதி ஒரு பக்கம் நீராட, எதிர் பக்கமாய் நின்று ஆதீனம் நீராடினார். ஒருமரியாதைக்காகக் கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, வணங்கிக் கொள்ளவோ இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
பின்னர் ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்த ஆதீனம், தன்னை காஞ்சி மடாதிபதி தொடர்ந்து புறக்கணித்ததாகக் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications