மெரீனா பீச்சில் பிரச்சாரம் தொடங்க கருணாநிதிக்கு போலீஸ் அனுமதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் தொடங்கிய அதே இடத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தனது தேர்தல்பிரச்சாரத்தைத் தொடங்க போலீஸார் அனுமதியளித்துள்ளனர்.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடந்த செயல்வீரர் கூட்டத்தில் இது தொடர்பாகதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசியதாவது:
கடற்கரை சாலையில் மேடை போட்டு, ஒலிப்பெருக்கி வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மெரீனா பீச் சாலையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதனையடுத்து ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கிய அதே இடத்தில் தானும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாக கருணாநிதி அறிவித்தார். அதற்கான அனுமதியைப் பெற திமுக மாவட்ட செயலாளர் துணை கமிஷனர்அலுவலகத்துக்குச் சென்றார்.
கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த துணைக் கமிஷ்னர் சண்முக ராஜேஸ்வரன் அங்கு இருந்தார்.கடற்கரையில் எங்கு வேண்டுமானாலும் மேடை போடவும், ஒலிப்பெருக்கிகளைக் கட்டவும்அனுமதியளித்திருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
முன்னதாக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கடற்கரையில் கூட்டம் நடத்தவே அதிமுகஅரசுதான் தடை போட்டது. ஆனால் ஜெயலலிதா கடற்கரையில்தான் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்குஅனுமதி தந்ததன் மூலம் கடற்கரையில் கூட்டம் நடத்தலாம் என்று போலீஸார் அச்சாரம் போட்டுள்ளனர். இதனால்நானும் கடற்கரையிலிருந்து தான் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறேன்.
போலீஸார் ‘நீதிமான்கள்’ என்பதால் எனக்கும் அனுமதி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கருணாநிதிகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அனுமதி மறுத்தால் தேர்தல் நேரத்தில் கருணாநிதி இதை பிரச்சனையாக்குவார்என்பதால் வேறு வழியின்றி போலீஸாரும், அரசும் பணிந்துள்ளனர்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications