கருணா விலகலுக்கு அமெரிக்காவே காரணம்: புலிகள்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டதற்கு அமெரிக்காவே காரணம் என்று விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை அமெரிக்கா மறுத்துள்ளது.
கிழக்குப் பகுதியில் தனித்து இயங்கப் போவதாக தளபதி கருணா அறிவித்ததையடுத்து அவர் விடுதலைப் புலிகள்இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். கிழக்குப் பகுதியின் புதிய பொறுப்பாளராக கரிகாலன் நியமிக்கப்பட்டார்.யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு கரிகாலன் பேசியதாவது:
கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்ததற்கு அமெரிக்காவின் பின்னணியும், கருணாவின்சுயநலமும் காரணம். கருணாவை தனது பிரதிநிதியாக இயக்கத் தலைவர் பிரபாகரன் பல முறை வெளிநாடுகளுக்குஅனுப்பி வைத்துள்ளார். அப்போது வெளிநாட்டு சக்திகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதானம் ஏற்பட்டு விடக்கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு கருணாவைஅமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. இலங்கை ராணுவ அதிகாரி லியோனெல் பாலகல்லேயும், கருணாவும்அடிக்கடி சந்திக்கிறார்கள். எதிர்காலத்தில் இலங்கை ராணுவத்துடன் இணைந்து கருணா செயல்படவும்வாய்ப்புள்ளது என்றார்.
கரிகாலனின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர்கோடி டெய்லர் மறுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார்.
கருணா மீது தாக்குதல்?
இதற்கிடையே கருணா தரப்பினர் வாழும் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையினர்குவிக்கப்பட்டு வருகின்றனர். தங்கள் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர் என்றுகருணா ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் கிழக்குப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications