கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற வைகோ தேர்தல் உத்திகள் குறித்து விவாதம்செய்தார். அவருடன், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணனும் உடன்இருந்தார்.
திமுக கூட்டணியின் முக்கியப் பிரச்சார பீரங்கியாக உள்ள வைகோ இன்னும் தனது தீவிரப் பிரச்சாரத்தைத்தொடங்காத நிலையில், தேர்தல் பிரச்சாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், அரசியல் கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விட்டு வருகிறார்ஜெயலலிதா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து மிகவும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். இதன் மூலம்அவரது தகுதி தெரிய வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் சோனியா காந்தி. அவர் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டால் மதிமுக அந்த முடிவை ஆதரிக்கும்.
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கவில்லை. மாறாகவாஜ்பாயை முன்னிருத்தியே ஓட்டு கேட்கிறார். அவரது ஆட்சியில் எந்த சாதனைகளும் இல்லை, வேதனைகள்தான்அதிகம் என்பதையே இது காட்டுகிறது என்றார் அவர்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications