அரசு பொருட்காட்சியில் ஜெ. கட் அவுட்கள், பேனர்கள் அகற்றம்
சென்னை:
சென்னை தீவுத் திடலில் நடந்து வரும் அரசு சுற்றுலாப் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுடன்கட்-அவுட்கள், அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.
சென்னை தீவுத் திடல் மைதானத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும்இரு மாதங்களுக்கு முன் சுற்றுலாப் பொருட்காட்சி தொடங்கியது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின் மாபெரும்கட்-அவுட்களுடன் கூடிய அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள், தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
பொருட்காட்சி மைதானத்தில் எங்கு பார்த்தாலும் இவைதான் இருந்தன. நாடாளுமன்றத் தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் இவை அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அகற்றப்படவிலலை. இதுகுறித்துஎதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றன.
இதையடுத்து, உடனடியாக இவற்றை அகற்றுமாறு சுற்றுலாத்துறைக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கிஉத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பேனர்கள், தட்டிகள் அகற்றப்பட்டுவருகின்றன. இந்தப் பணி மிக மெதுவாகவே நடக்கிறது.
ஜெயலலிதாவுக்காக கால் கடுக்க...
இந் நிலையில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் தருமாறுஅறநிலையத் துறை அதிகாரி உத்தரவிட்டதால், கோவில் பூசாரிகள் பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் கால்வலிக்க நிற்கும் நிலை ஏற்பட்டது.
சேலத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜெயலலிதா எல்.என்.ஆர். எக்ஸலன்சி ஹோட்டலில் தங்கினார். அவருக்குபிரசாதம் தர வேண்டும் என சேலத்தின் முக்கிய கோவில்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து காலையிலேயே சிறப்புப் பூஜைகளை முடித்துக் கொண்டு அர்ச்சகர்கள் பிரசாதங்களுடன்ஹோட்டலுக்கு ஓடி வந்தனர். அதையெல்லாம் ஒரே ஒரு அர்ச்சகரிடம் தந்து ஜெயலலிதாவின் அறைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர். இதனால் மற்ற அர்ச்சகர்கள் ஏமாற்றத்துடன் வெளியிலேயே நின்றனர்.
இந் நிலையில் சுகனேஸ்வரர் கோவிலின் அர்ச்சகர்கள் தாமதமாக வந்தனர். அவர்களை ஹோட்டலுக்குள் போலீசார்அனுமதிக்கவில்லை. கடும் வெயிலில் நிறுத்தப்பட்ட அவர்கள் நெடுநேரம் போலீசாரிடம் உள்ளே விடுமாறுகெஞ்சிக் கொண்டே இருந்தனர்.
கடைசி வரை விடாததால் பிரசாதத்தை போலீசார் மூலமே ஜெயலலிதாவுக்கு அனுப்பி விட்டு வேதனையுடன்திரும்பிச் சென்றனர்.
ஓய்வு முடிந்தது.. மீண்டும பிரசாரம்:
இந் நிலையில் இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று முதல் ஜெயலலிதா மீண்டும் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத்தொடங்குகிறார்.
இதுவரை சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் பகுதிகளில் பிரச்சாரப் பயணத்தை முடித்துவிட்டஅவர் சேலத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை (இன்று) ஓய்வெடுத்தார். இந் நிலையில் அவரது 7வது பிரச்சாரம்இன்று மாலை தொடங்குகிறது.
சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்றும், திருச்செங்கோடு, ஈரோட்டில் நாளையும் அவர் பிரசாரப் பயணம்மேற்கொள்கிறார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications