அது மாறனின் சாதனை அல்ல..: பா.ஜ.க

Subscribe to Oneindia Tamil

சேலம் & பாண்டிச்சேரி:

காங்கிரஸ் கூட்டணியில் பிரதம வேட்பாளரோ, கூட்டணியின் செயல் திட்டமோ அறிவிக்கப்படவில்லை என்றுஅகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் சேலம் வந்த நாயுடு, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரஸ் கூட்டணி பிரதம வேட்பாளரையும், கூட்டணியின் செயல் திட்டத்தையும் அறிவிக்காமல் மக்களிடம்வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால் அதற்கு மாறாக, நாங்கள் பிரதமர் வாஜ்பாயை முன்னிருத்தி, தேசிய ஜனநாயகக்கூட்டணியின் சாதனைகளைக் கூறி வோட்டு கேட்கிறோம்.

எங்களது தேர்தல் அறிக்கையில் ஏழைகள் நலனுக்கும், விவசாய வளர்ச்சிக்கும் முக்கியவத்துவம் கொடுப்பதாகக்கூறியுள்ளோம். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்.

உலக வர்த்தக மாநாட்டில் மறைந்த மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் பேச்சை திமுகவின்சாதனையாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். உண்மையில் அது தேசிய ஜனநாயகக்கூட்டணியின் சாதனையாகும். கூட்டணியின் செயல் திட்டத்தில் கூறப்பட்டதைத்தான் அவர் பேசினார். மாநாட்டில்அவர் என்ன பேச வேண்டும் என்பதை வாஜ்பாயும், மத்திய அமைச்சரவையும் தான் முடிவு செய்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி குறித்து கருணாநிதி பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். இதை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மத்தியில் அமையும் அரசில் பதவி வகிக்க மாட்டோம் என்றுகூறியுள்ளார். ஏனென்றால் இவர் எதிர்நோக்கும் அரசு அமையப் போவது இல்லை.

முதல்வர் ஜெயலிலாதவின் பிரச்சாரம் எங்கள் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அவரதுபிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், 40 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நாடு மோசமானநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும் மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரசுடன்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்களைமீண்டும் ஆட்சியில் அமர்த்த கம்யூனிஸ்ட்கள் விரும்புகிறார்களா?

அயோத்தி பிரச்சனையில் தீர்வு காண எங்கள் கூட்டணி தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது என்றார்.

பின்னர் சிறப்பு ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்ற நாயுடு அங்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தடாபெரியசாமியை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்தார். அதன் பின்னர் அவர் பாண்டிச்சேரி சென்றார். அங்குசெய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

கடந்த நாற்பது வருடங்களாக சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது.அவர்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை. ஆனால் வாஜ்பாய் தலைமையிலான அரசுசிறுபான்மையினத்தவரின் நலனுக்காகப் பாடுபடுவதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால் இப்போதுஅவர்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர்.

கடந்த காலங்களில் தாங்கள் விமர்சித்த திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளுடனேயே காங்கிரஸ் கட்சிஇப்போது கூட்டணி அமைத்துள்ளது. 5 ஆண்டுகளாக மத்திய அரசில் பதவி வகித்த பா.ம.கவுக்கு இப்போது அதைவிமர்சிக்கும் தகுதி இல்லை.

வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் கூட்டாக பிரச்சாரம் செய்வார்கள். ஜெயலலிதாவிடம் பிரச்சாரத் தேதிகுறித்து கேட்கப்படும். அது பற்றி வாஜ்பாயுடன் கலந்தாலோசித்து கூட்டாக பிரச்சாரம் செய்யும் தேதி பின்னர்அறிவிக்கப்படும் என்றார். பேட்டியின்போது மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பா.ஜ.க. மாநிலத் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன், அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார். ராஜீவ்காந்தி திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார். இன்றிரவே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+