மலையையும் விடவில்லை தேர்தல் பிரச்சாரம்!
மதுரை:
கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப் பாறைகளிலும் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளருக்குஆதரவாக பிரச்சாரம் செய்து வைத்து சுற்றுலாப் பயணிகளை கதி கலக்கி வருகிறார்கள்.
அரசாங்க அலுவலக சுவர்கள், பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்யக் கூடாது, தனியார்சுவர்களில் அனுமதி பெற்றுத்தான் விளம்பரம் வரைய வேண்டும், தட்டிகள் வைக்கக் கூடாது, பேனர்கள் கட்டக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கிடுக்கிப் பிடி போட்டுள்ளதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்வெறுத்துப் போயுள்ளனர்.
சிக்கனை எடுத்துப் போட்டு விட்டு வெறும் பிரியாணியை சாப்பிடச் சொல்கிறதே தேர்தல் ஆணையம் என்றுஅவர்கள் கடுப்பாகக் கூறி வருகிறார்கள். விளம்பரம் இல்லாமல் தேர்தலா என்றும் அவர்கள்ஆதங்கப்படுகிறார்கள்.
இந் நிலையில் வத்தலக்குண்டு, கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில்உள்ள மலைப் பாதைகளில் காணப்படும் பாறைகள் முழுவதும் அரசியல் பிரச்சாரத்தால் அலங்கோலமாகி உள்ளன.
பல்வேறு கட்சியினரும் மலைப் பாறைகளில் தங்களது வேட்பாளருக்காக விளம்பரங்களை எழுதிக்குவித்துள்ளனர். ஆனால் மலைப் பாறைகளை தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்க்க முடியுமா, முடியாதா என்றகுழப்பம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படவில்லை.
ஓய்வாக இருக்கலாம் என்று வந்தால், இங்கேயும் அரசியலா என்று கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இந்தபல கட்சிகளின் பாறை விளம்பரத்தைப் பார்த்து, நொந்து போய் மலையேறுகிறார்கள்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications