வேட்பாளர்களிடம் திமுக ரூ.60 லட்சம் வசூல்: தேர்தல் கமிஷனிடம் அதிமுக புகார்
டெல்லி:
தேர்தல் விதிமுறைகளை மீறி ஒவ்வொரு வேட்பாளர்களிடமும் திமுக தலைமை ரூ.60 லட்சம் வாங்கியுள்ளதாகத்தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
இந்தப் புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் அதிமுகவின் பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன் எம்.பி. கொடுத்தார். அதில், தேர்தல் நிதியாக கடந்த ஜூன் மாதத்திலேயே திமுக தனதுகட்சித் தொண்டர்களிடம் ரூ.25 கோடி வசூலித்துவிட்டது.
பின்னர் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்கள் தேர்தல் செலவுகளுக்காக ரூ.60 லட்சம் கட்ட வேண்டும் என்றுகட்சிப் பத்திரிக்கையான முரசொலியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 15 வேட்பாளர்களும் பணம் கட்டியுள்ளனர்.
அதே போல பணம் கட்டிய ஆலடி அருணா, தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்த பின்பு பணத்தைத்திரும்பப் பெற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒரு தொகுதிக்கு ரூ.25 லட்சம் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.எனவே, வேட்பாளர்களிடம் திமுக ரூ.60 லட்சம் வாங்கியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். ஆகவேதிமுக மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தொகுதிக்குத் தொகுதி அமைச்சர்கள் வந்து முகாமிட்டு பணத்தை கடல் தண்ணீராய் செலவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications