இரு நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் ஜெ. பிரசாரம்
சேலம்:
சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் தருமாறு அறநிலையத் துறைஅதிகாரி உத்தரவிட்டதால், கோவில் பூசாரிகள் பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் கால் வலிக்க நிற்கும் நிலைஏற்பட்டது.
சேலத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜெயலலிதா எல்.என்.ஆர். எக்ஸலன்சி ஹோட்டலில் தங்கினார். அவருக்குபிரசாதம் தர வேண்டும் என சேலத்தின் முக்கிய கோவில்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து காலையிலேயே சிறப்புப் பூஜைகளை முடித்துக் கொண்டு அர்ச்சகர்கள் பிரசாதங்களுடன்ஹோட்டலுக்கு ஓடி வந்தனர். அதையெல்லாம் ஒரே ஒரு அர்ச்சகரிடம் தந்து ஜெயலலிதாவின் அறைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர். இதனால் மற்ற அர்ச்சகர்கள் ஏமாற்றத்துடன் வெளியிலேயே நின்றனர்.
இந் நிலையில் சுகனேஸ்வரர் கோவிலின் அர்ச்சகர்கள் தாமதமாக வந்தனர். அவர்களை ஹோட்டலுக்குள் போலீசார்அனுமதிக்கவில்லை.
கடும் வெயிலில் நிறுத்தப்பட்ட அவர்கள் நெடுநேரம் போலீசாரிடம் உள்ளே விடுமாறு கெஞ்சிக் கொண்டேஇருந்தனர். கடைசி வரை விடாததால் பிரசாதத்தை போலீசார் மூலமே ஜெயலலிதாவுக்கு அனுப்பி விட்டுவேதனையுடன் திரும்பிச் சென்றனர்.
இந் நிலையில் இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று முதல் ஜெயலலிதா மீண்டும் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத்தொடங்குகிறார்.
இதுவரை சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் பகுதிகளில் பிரச்சாரப் பயணத்தை முடித்துவிட்டஅவர் சேலத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை (இன்று) ஓய்வெடுத்தார். இந் நிலையில் அவரது 7வது பிரச்சாரம்இன்று மாலை தொடங்குகிறது.
சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்றும், திருச்செங்கோடு, ஈரோட்டில் நாளையும் அவர் பிரசாரப் பயணம்மேற்கொள்கிறார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications