வைஷ்ணவத்தை விமர்சிக்கவில்லை: சங்கராச்சாரியார் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வைஷ்ணவ சித்தாந்தத்தை நான் விமர்சிக்கவில்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

ஸ்ரீதிதண்டி நாராயண ஜீயர் குறித்து சங்கராச்சாரியார் அஜதூறாகப் பேசி விட்டதாகவும், அவரை ஜீயரே இல்லைஎன்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், திருப்பதி கோவில் நிர்வாகம் திதண்டி ஜீயருக்கு ஏராளமான பணத்தைக் கொடுப்பதாகவும், அதை அவர்சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் சங்கராச்சாரியார் ஹைதராபாத்தில் கூறியதாக செய்திகள்வெளியாகின. இதனால் 5 வைஷ்ணவ ஜீயர்கள் கொதித்தெழுந்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தை சங்கராச்சாரியார் கைப்பற்ற முயற்சிப்பதாக அவர்கள் புகார்தெரிவித்தனர். சங்கராச்சாரியாரின் பேச்சால்,சைவ, வைஷ்வணர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் என்றும்அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த சங்கராச்சாரியார் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லாம் ஹைதராபாத் பத்திரிக்கையாளர்களால் வந்த குழப்பம்.

சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தபோது திருப்பதி கோவிலில் வைகானச ஆகம முறைப்படிசடங்குகள் நடத்தப்படுவதாக மட்டுமே கூறினேன். ஆனால், வைகானச ஆகமத்திற்கும், விசிஷ்டாத்வைதசித்தாந்தத்திற்கும் இடையிலான வித்தியாசம், திதண்டி சின்ன ஸ்ரீமான் நாராயண ஜீயருக்குத் தெரியவில்லை என்றுகூறியதாக செய்திகள் வெளியாகி விட்டன. இதுதான் பிரச்சினைக்குக் காரணம்.

என் மீது திதண்டி ஜீயரும், மற்ற வைஷ்ணவ ஜீயர்களும் கூறியுள்ள புகார்களில் உண்மை இல்லை. உண்மையில்,திருப்பதி கோவில் புனரமைப்பு தொடர்பாக சில சந்தேகங்களை கோவில் நிர்வாகம் கேட்டிருந்தது. நானும்ஆலோசனை கூறினேன்.

திருப்பதி கோவிலை இழிவுபடுத்துவதோ, வைஷ்ணவத்தை விமர்சிப்பதோ எனது நோக்கம் இல்லை. ஆதிசங்கரர்திருப்பதி கோவிலில் பூஜைகள் செய்திருக்கிறார், எனது குடும்பக் கடவுளாகவும் வெங்கடாசலபதி விளங்குகிறார்.பல சைவ துறவிகளுக்கும் வெங்கடாசலபதி குடும்பக் கடவுளாக இருக்கிறார்.

பிரச்சினையே புரியாமல் சிலர் இதை பெரிதாக்கி சுய விளம்பரம் தேடிக் கொள்ள விரும்புகிறார்கள் என்றார்சங்கராச்சாரியார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+