இனி திமுகவுடன் நெருடல் ஏற்படாது: வைகோ
சென்னை:
இனி எப்போதும் திமுகவுடன் நெருடல் ஏற்படாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
விருதுநகர் மாநாட்டுக்கு நான் சென்றபோது லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் என்னை உற்சாகமாகவரவேற்றார்கள். திமுக, மதிமுக தொண்டர்கள் இணைந்து செயலாற்றுகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அந்தளவுக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்றார்.
உங்களுக்குக் கூடும் கூட்டம் குறித்து திமுக தலைமை என்ன நினைக்கிறது என்ற கேள்விக்கு, எனக்கு வரும்கூட்டத்தைப் பார்த்து கருணாநிதி மகிழ்ச்சி தான் அடைவார். . இனி எப்போதும் எங்களுக்குள் நெருடல் ஏற்படாதுஎன்றார்.
26ல் தேர்தல் அறிக்கை:
இதற்கிடையே மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வரும் 26ம் தேதி கோவையில் வைகோ வெளியிடுகிறார்.
துணைப் பிரதமர் அத்வானி பொதுக் கூட்டம் நடத்திய வ.உ.சி. மைதானத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த மதிமுக திட்டமிட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில், மக்களவையில் பொடா சட்டம் குறித்து நான் பேசநினைத்திருந்ததை பேசப் போவதாக வைகோ கூறியுள்ளார்.
அதற்கு முன்பாக கட்சியின் தேர்தல் அறிக்கையை வரும் 26ம் தேதி கோவையில் வெளியிட வைகோதிட்டமிட்டுள்ளார்.
கர்நாடகத்திற்கு வைகோ கோரிக்கை:
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலகப் பொது மறையாக திருக்குறள்கருதப்படுகிறது. இலக்கியத்தின் ஒரு வெளிப்பாடுதான் திருக்குறள். இதற்கு மதம், மொழி பாரபட்சம் கிடையாது.அனைவருக்கும் பொதுவானது.
கன்னடம் உள்பட உலகின் பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பைபிளுக்குஅடுத்ததாக அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உள்ளது.
உத்தாரஞ்சல் மாநிலத்தில் கூட திருவள்ளுவரின் பெருமையைப் போற்றும் வகையில் ஷிகேஷில் அவருக்கு ஒருசிலை வைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பெங்களூரிலும் வள்ளுவரின் சிலையைத் திறக்க கர்நாடக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிக்க வீரப்பன் போட்ட நிபந்தனைகளில் ஒன்று, பெங்களூரில்திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும் என்பது. அதை கர்நாடக அரசும் ஏற்றுக் கொண்டது. ஆனால்இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை என்று கூறியுள்ளார் வைகோ.
ஏற்கனவே, பெங்களூர் அல்சூர் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கம் மற்றும் பிரமாண்ட ஏரிக்கு எதிரே பலஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை கன்னட வெறியர்களின் எதிர்ப்பு காரணமாகதிறக்கப்படாமல், சாக்குப் பையால் மூடி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications