கூட்டம் கூட்டவில்லை: கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு- ஜெ. அதிரடி
சென்னை:
தனது பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டத்தைக் கூட்ட முடியாத கிருஷ்ணகிரி அதிமுக மாவட்டச் செயலாளர்காத்தவராயனையும், அந்த தொகுதி தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றிருந்த எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி,கோவிந்தராஜ் ஆகியோரையும் முதல்வர் ஜெயலலிதா கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.
தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை கடந்த 9ம் தேதி தொடங்கிய ஜெயலலிதா, ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவுகூட்டம் கூடுகிறது என்று பார்க்கிறார், கூட்டம் இல்லாவிட்டால் அவரது முகத்தில் பிரகாசமும் இருப்பதில்லை.இதனால் பிரியாணி, கைச் செலவுக்கு காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பதில் மந்திரிமார்கள் தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக பச்சைப் புடவைகளுடன் மகளிர் சுய உதவிக் குழுவினரை ஆயிரக்கணக்கில் கொண்டு வந்துகுவித்துவிடுகின்றனர். இதற்காக பஸ்கள், வேன்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கட்சிப்பிரதிநிதிகளுடையது. செலவு விஷயங்களை அமைச்சர்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
இவ்வளவு செய்தும் பல இடங்களில் கூட்டம் இல்லை. இவர்கள் அழைத்து வந்த ஆட்கள் தவிர வேறு யாரும்ஜெயலலிதாவைப் பார்க்கவே வரவில்லை. இதனால் ஆங்காங்கே மந்திரிகளும் கட்சியின் நிர்வாகிகளும்ஜெயலலிதாவிடம் மாட்டிக் கொள்கின்றனர். கடுமையாக டோஸ் வாங்குகின்றனர்.
கடந்த வாரம் கிருஷ்ணகிரி தொகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அங்கு பெருமளவில் கூட்டம்கூடவில்லை. இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரான கே.பி.காத்தவராயனை அந்தப் பொறுப்பில்இருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை தர்மபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் (செய்தி மற்றும்உள்ளாட்சித் துறை மந்திரி) கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராகவும் செயல்படுவார் என்று அறிவித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரி தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருந்த கே.பி.முனுசாமி (காவேரிப்பட்டினம்எம்.எல்.ஏ.), கோவிந்தராஜ் (கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.) ஆகியோரையும் தேர்தல் பணிக்குழுவில் இருந்துநீக்கியுள்ளார்.
முன்னாள் ஒன்றியச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயவேலு ஆகியோரை புதியதேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் காத்தவராயன், கடந்த மாதம்கொளப்பாக்கம் அதிமுக மாநாட்டில்தான் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications