சப்தம் போடாமல் கலக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி
தென்காசி:
தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் போட்டியிடும் மக்கள் கூட்டணி வேட்பாளர்டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக தனது பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
தென்காசி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி. முருகேசன் களத்தில் நிற்கிறார். இங்கு திமுக கூட்டணிசார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அப்பாதுரை களத்தில் இருக்கிறார். மூன்றாவது முக்கிய வேட்பாளராகடாக்டர் கிருஷ்ணசாமி களத்தில் உள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி இந்தத் தொகுதியில் சில மாதங்களுக்கு முன்பே தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.அடிக்கடி தொகுதி மக்களை சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காண யோசனைகள்சொல்லி வந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் என்ற முறையில் அவர்களைஅணுகி வருகிறார்.
தொகுதிக்குட்பட்ட கிராமங்களை பட்டியலிட்டு ரவுண்டு அடிக்கும் கிருஷ்ணசாமி அவர்களுடன் அமர்ந்துபேசுகிறார். தனது வாக்குறுதிகளை மிகவும் அமைதியாகவும், உப்பு, உறைப்பு சேர்க்காமல் சாதாரணமாகவும்எடுத்து வைக்கிறார். கிருஷ்ணசாமியின் நிதானமான, திட்டமிட்ட பிரச்சாரம் தென்காசி மக்களை அதிகம்கவர்ந்துள்ளது.
மேலும், இரவு 10 மணிக்கு மேல்தான் கிருஷ்ணசாமி தனது தொகுதி ரவுண்ட் அப்பை ஆரம்பிக்கிறார். ஒவ்வொருகிராமமாக செல்லும் அவர் அங்குள்ளவர்களை சந்தித்து சகஜமாக பேசி வாக்காளர்களை ஈர்த்து வருகிறார்.
3 முக்கிய கட்சிகள் களத்திலும் இருந்தாலும் கூட, அதிமுக வேட்பாளர் முருகசேனுக்கும், கிருஷ்ணசாமிக்கும்தான்இங்கு நேரடிப் போட்டி என்று பேச்சு நிலவுகிறது. மே 10 தேதிக்குப் பிறகு யாருக்கு மக்கள் ஓட்டு என்பது தெரிந்துவிடும்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications