உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சோனியா இந்தியர் தான்: கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் வெளிநாட்டினர் பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்று குறிப்பிடவே இல்லைஎன திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மறுத்தார்.
கருணாநிதியுடம் கையெழுத்திட்ட செயல் திட்டத்தின் நகலை இன்று பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டார்.இதையடுத்து சிறிது நேரத்தில் கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உயர் பதவிகளுக்கு யார் வரலாம், வரக்கூடாது என்று ஒரு தீர்மானத்தை செயல் திட்டத்தில் பா.ஜ.க. சேர்த்தது. ஆனால், அதில்தெளிவான குறிப்பு ஏதும் இல்லை. பொத்தம்பொதுவாக ஒன்றை சேர்த்தார்கள்.
இந்தியாவில் பிறந்த இந்தியர் தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை (அப்படிக் குறிப்பிட்டால்அத்வானி பிரதமர் பதவிக்கு வர முடியாது). இந் நிலையில் அதில் நானே கையெழுத்து போட்டிருந்தாலும் கூட பின்னர் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறியது?.
சோனியா ஒரு இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்டது. நான் உச்ச நீதிமன்றத்தைமதிக்கிறேன். இதனால் பா.ஜ.கவுடன் இந்த விஷயத்தில் லாவணி பாடிக் கொண்டிருக்க நான் தயாராக இல்லை என்றார்கருணாநிதி.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications