யாருக்கு ஆதரவு?: தமுமுக நாளை அறிவிப்பு
தஞ்சாவூர்:
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு எந்தக் கட்சிக்கு என்பது குறித்து நாளை (21ம் தேதி) தஞ்சையில்நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் பேராசியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடுஅளிக்கக் கோரி நாளை மாபெரும் ஊர்வலம் மற்றும் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின்போது, தேர்தலில் எங்களது ஆதரவு எந்தக் கட்சிக்கு என்பது அறிவிக்கப்படும். முஸ்லீம்களுக்கு தனிதொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாகும் என்றார்.
இஸ்லாமியர்கள் பெயரில் பல கட்சிகள் நடத்தப்பட்டாலும் சமீபகாலத்தில் தமிழகம் முழுவதும் ஆதரவு பெற்ற கட்சியாகவளர்ந்துள்ள த.மு.மு.க தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 12 இஸ்லாமிய அமைப்புகள் இந்தக் கட்சியில்ஐக்கியமாகிவிட்டன.
இந் நிலையில் இந்தக் கட்சி எடுக்கும் முடிவு மாநில அளவில் இஸ்லாமிய மக்களின் வாக்குகளை ஒரு அணிக்குக் கொண்டு வரஉதவும். கடந்த தேர்தல்களில் யாருக்கும் ஆதரவு தராமல் நடுநிலை வகித்து வந்தது இந்தக் கட்சி.
ஆனால், சமீபத்தில் நடந்த இதன் செயற்குழுக் கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் நமது ஆதரவு யாருக்கு என்பதைஅறிவிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
களத்தில் குதிக்கும் கொங்கு கட்சி:
கொங்கு வேளாள கெளண்டர்கள் பேரவையின் அரசியல் கட்சியான ஐக்கிய தமிழ் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
கொங்கு மண்டலமான கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாள கெளண்டர்கள் பேரவைபிரபலமானது. இந்த அமைப்பு தற்போது ஐக்கிய தமிழ் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் உள்ள 12 தொகுதிகளில் போட்டியிடவும் இக்கட்சி முடிவு செய்துள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications