தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்
ராமேஸ்வரம்:
பலத்த கடல் காற்றில் சிக்கி திசை மாறி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று சிக்கித் தவித்த 4 ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கைமீனவர்கள் மீட்டு ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலன், காரல் மார்க்ஸ், சாக்ரடீஸ், டல்சி ஆகிய நான்கு மீனவர்களும், புதன்கிழமை மீன் பிடிக்ககடலுக்குள் சென்றனர். அடுத்த நாளே அவர்கள் திரும்பி வந்திருக்க வேண்டும்.
ஆனால் கடலில் வீசிய கடுமையான காற்றினால் அவர்களது படகு திசை மாறி இலங்கை, நெடுந்தீவு பகுதிக்குச் சென்று விட்டது.அங்கு கடலில் அவர்கள் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். மேலும், கடலில் வீசிய காற்று காரணமாக அவர்களதுபடகும் மூழ்கும் நிலையில் இருந்தது.
இவர்களைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக தங்களது படகுகளில் சென்று நான்கு பேரையும் மீட்டனர். பின்னர்அவர்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் நடந்து வரும் வேளையில் இலங்கை மீனவர்களின்இந்த மனிதாபிமான உதவியை ராமேஸ்வரம் மீனவர்கள் பாராட்டினர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications