அதிமுக-பா.ஜ.கவுக்கு எதிராக பழ. நெடுமாறன் பிரச்சாரம்
சென்னை:
அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியுற வேண்டும் என்று கூறியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இக்கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
நீண்ட காலத்துக்கு முன் காங்கிரசில் இருந்து விலகியது முதல் தமிழர் நலன், உரிமைகள் என தன் பயணத்தை வகுத்துக்கொண்டுவிட்ட நெடுமாறன் அரசியல் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அரவது இன உரிமைப் போராட்டங்கள் காரணமாக பலமுறை சிறையைச் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் அதிமுக அரசால் பொடாசட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார்.
இந் நிலையில் இத்தனை ஆண்டுகளாக அவரே ஒதுக்கி வைத்திருந்த அரசியலில் மீண்டும் குதிக்கிறார் பழ. நெடுமாறன்.நேரடியாக களத்தில் இறங்காவிட்டாலும் அதிமுக-பா.ஜ,கவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதச்சார்பின்மையைக் காக்க தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போகிறேன். அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவினாலே, பொடா போன்ற கொடிய சட்டங்கள் நிச்சயம் ரத்தாகி விடும்.
தமிழர்கள் நலன், திராவிட உணர்வுகளைக் கூர் தீட்ட திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறவைக்க வேண்டியது மக்களின் கடமையாகும். இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும்இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications