இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்ய வரும் பிரியங்கா
கோபிச் செட்டிப்பாளையம்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன், கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிடவுள்ளார். அவருக்குஆதரவாக பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி அல்லது பிரியங்கா கோபி வரவுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இரண்டு பேர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்களின் பட்டியல் விரைவில் வரும் என்று தெரிகிறது.
கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில், இளங்கோவன்தான் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்தவிஷயத்தை இளங்கோவனிடமும், திமுக தலைமையிடமும் டெல்லி காங்கிரஸ் தலைமை தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தனது தேர்தல் பணிகளை ஆரம்பிக்க அவர் கோபிக்கு வந்தார். அப்போது தனக்காக கோபியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கச்சொல்லி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வீடு தேடும் வேலை நடக்கிறது.
காங்கிரஸ் தொண்டர்கள் தவிர அப் பகுதி திமுக நிர்வாகிகள்ஸ தொண்டர்களையும் சந்தித்துப் பேசிய இளங்கோவன், சிலபகுதிகளில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
அவரிடம் கோபி வேட்பாளர் நீங்கள்தான் என்பது உறுதியாகி விட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, வேட்பாளர் யார்என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். இங்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சோனியா காந்தி அல்லதுபிரியங்கா ஆகியோரில் ஒருவர் பிரசாரம் செய்வார்கள் என்றார் புன்னகைத்தபடியே.
ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கி வரும் இளங்கோவனுக்கு சோனியாவை விட பிரியங்காவிடம் அதிக செல்வாக்குஉள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்காக பிரியங்கா பிரச்சாரத்துக்கு வருவார் என்கிறார்கள்.
-
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications