பா.ஜ.கவுக்கு ஜெ. விதித்த நிபந்தனைகள்: ராமதாஸ்
சென்னை:
சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது அவருடன் கூட்டணி அமைத்திருப்பதாகஎங்களைக் குற்றம் சொல்லும் பா.ஜ.க, முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததபோது ஜெயலலிதா போட்ட நிபந்தனைகளைஏற்றுக் கொண்ட விவரத்தை வெளியில் சொல்ல வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வழக்கு விவகாரங்களில் ஆரம்பித்து பல்வேறு நிபந்தனைகளுடன் தான் பா.ஜ.கவுடன் அதிமுக கைகோர்த்தது என்று அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. இப்போது சோனியா விஷயத்தில் பா.ஜ.க. ஆதரங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளநிலையில் பா.ம.கவும் நிபந்தனை விவகாரத்தை வெளியில் எடுத்து விட்டுள்ளது.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, எங்களைப் பார்த்துசோனியாவுடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என்று கேட்கிறார். அதற்கு அவருக்கு அருகதையே கிடையாது.
ஜெயலலிதா போட்ட எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு தான் கூட்டணி அமைக்கப்பட்டதாக பா.ஜ.க. மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசரே கூறியிருக்கிறார். அந்த நிபந்தனைகள் என்னென்ன என்பதை மக்களிடம் பா.ஜ.க. ஒளிவுமறைவின்றிசொல்ல வேண்டும்.
அதற்குப் பிறகு எங்களிடம் (திமுத, பா.ம.க, மதிமுக) விளக்கம் கேட்க பா.ஜ.க. வரலாம்.
செயல்படாத பிரதமர், தமிழ்நாட்டு துரோகம் செய்த பிரதமர் என்று வாஜ்பாயை வாய் மணக்க திட்டிய ஜெயலலிதாவுடன்கூட்டணி அமைத்துள்ளீர்கள். இதற்கு அவர் போட்ட நிபந்தனைகளையும ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிபந்தனைகளைவெளியே சொல்ல நாயுடு தயாரா என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications