கற்புக்கரசி கண்ணகியை கிண்டலடித்த அமைச்சர்
நாங்குநேரி & சென்னை:
கற்புக்கரசி கண்ணகியை கடுமையாகக் கிண்டலடித்துப் பேசினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நாங்குநேரியில் நடந்த அதிமுக-பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இங்கு திமுக வேட்பாளராக நிறுத்தப்படிருக்கிறார் ராதிகா செல்வி. நீதி கேட்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். எதற்காக நீதி கேட்கிறார் ராதிகா?. செனனையில் நீதி கேட்டுக் கொண்டிருந்த கண்ணகி சிலையே இன்று மியூசியத்தில் தான் உள்ளது.
மேலே பா.ஜ.க. ஆட்சி. கீழே அதிமுக ஆட்சி. இதனால் அதிமுகவினர் எதற்கும் பயப்படாமல் தேர்தல் வேலை பாருங்கள் என்றார்.
பின்னர் அதிமுக, பா.ஜ.கவினருக்கு கோழி பிரியாணியுடன் கூடிய விருந்தளித்தார் அமைச்சர். பிரியாணியை ஒரு பிடி பிடித்த தொண்டர்கள் இலைகளை, அருகே இருந்த திருநாகேசுவரர் கோவில் அருகே வீச, பக்தர்கள் முனுமுனுத்தவாறே நூற்றுக்கணக்கான பிரியாணி இலைகளை தாண்டி கோவிலுக்குள் சென்றனர்.
சிலையை கேட்டேன்.. தூக்கி போட்டார்கள்.. பரிதி:
இந் நிலையில் சென்னை திருவான்மியூரில் தென் சென்னை வேட்பாளர் டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக நடந்த திமுக தேர்தல் பொதுக் கூட்டத்தில் அக் கட்சியின் எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கூறியதாவது:
மெரீனா கடற்கரையில் இருந்த மீனவ குப்பங்களைக் காலி செய்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட நினைத்த ஜெயலலிதாவை தடுத்து நிறுத்தியவர் பாலு. அதே போல மெரீனாவில் உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடிக்க நினைத்த ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியவர் பாலு.
ஜெயலலிதாவுக்கு மெரீனாவும் பிடிக்காது.. செரீனாவும் (கஞ்சா புகழ் ஜனனி) பிடிக்காது.
மெரீனாவில் இருந்த கண்ணகி சிலையை திடீரென காணவில்லை. அது குறித்து சட்டசபையில் கேள்வி கேட்டேன். உடனே அவைக் காவலர்களை வைத்து என்னை வெளியே தூக்கி போட்டார்கள். போய் தேடிக்கோ என்றார்கள் என்றார் பரிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications