பாஜகவினரை நெளிய வைத்த அதிமுக எம்எல்ஏ- குறட்டை விட்ட எம்பி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த அதிமுக, பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.பெருமாள் விமர்சித்ததால், மேடையில் இருந்த பா.ஜ.க. தலைவர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். ஆனால்,கூட்டணி தர்மத்துக்காக அதைப் பொறுத்துக் கொண்டு அமைதி காத்தனர்.
தூத்துக்குடியில் அதிமுக, பா.ஜ.க. கூட்டு செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி எம்.பி.அமிர்தகணேசன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பெருமாள் உள்ளிட்ட அதிமுகவினரும், பா.ஜ.க. தலைவர்களும்கலந்துகொண்டனர்.
பெருமாள் பேசுகையில், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நமது அம்மாவை தேர்தலில் போட்டியிட முடியாமல்வாஜ்பாய் அரசுதான் தடுத்தது. தேர்தல் ஆணையத்தின் மூலம் அம்மாவின் வேட்பு மனுக்களை தள்ளுபடிசெய்தனர். இப்போது அம்மாவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதுதான் அம்மாவின் மகிமை என்ற ரீதியில் பேசிக்கொண்டே போக,மேடையில் இருந்த பா.ஜ.கவினர் நெளிய ஆரம்பித்தனர்.
பெருமாள் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கையில், முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.பி. அமிர்தகணேசன்குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அதிமுகவினர் அதிர்ந்தனர். அவரை எழுப்புவதற்காக பின்னர் பேசிய பேச்சாளர்கள்வேண்டுமென்றே ஹை-டெசிபலில் மைக்கில் கத்த, அப்படியும் எழவில்லை எம்.பி. இதையடுத்துசும்மாகாச்சுக்கும் எல்லோருமாக சேர்ந்து கைகளைத் தட்டி சத்தம் எழுப்பிய பின்னர் தான் விழித்தார்அமிர்தகணேசன்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications