சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆதரவாக தடயவியல் நிபுணர் சாட்சியம்!
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் அவருக்குச் சாதகமாக பிரபல தடவியல்நிபுணர் டாக்டர் சந்திரசேகர் சாட்சியம் அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் தடயவியல் நிபுணர்டாக்டர் சந்திரசேகர். சென்னை மருத்துவக் கல்லூரியின் தடயவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்தற்போது ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் இவர் தற்போது சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியம்ராஜகோபாலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் கொலை வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
டாக்டர் சந்திரசேகரின் சாட்சியம்: சாந்தகுமார் கொலை வழக்கில், கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்ட மண்டைஓட்டை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெயப்பிரகாஷின் அறிக்கையைமுழுவதுமாக படித்துப் பார்த்தேன்.
சம்பந்தப்பட்ட மண்டை ஓடு சாந்தகுமாருடையதுதான் என்பதற்கு ஆதாரமாக 6 அம்சங்களை டாக்டர்ஜெயப்பிரகாஷ் கொடுத்துள்ளார். ஆனால் இந்த 6 அம்சங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை அல்ல. இது பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இறந்த நபருடைய புகைப்படத்தின் தலைப் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு அதை மண்டை ஒட்டுடன்ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. வெறும் மண்டை ஓட்டை மட்டும் வைத்துக் கொண்டு அதை இறந்தவருடையபுகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முழுமையான அளவுக்கு அது அவர்தான் என்பதை உறுதி செய்யமுடியாது.
புகைப்படத்தில் உள்ள நபருடைய மண்டை ஓடுதான் இது என்றும் உறுதியிட்டுக் கூற முடியாது. டாக்டர்ஜெயப்பிரகாஷின் அறிக்கையில் உள்ளவை அவருடைய கருத்தாக மட்டுமே ஏற்க முடியும். அதை சட்டப்பூர்வமாகஏற்க முடியாது.
டாக்டர் ஜெயப்பிரகாஷின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 6 காரணங்களையும் எந்த தடயவியல் நிபுணரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இது ஆராய்ச்சி நிலையிலேயே உள்ள காரணங்களாகும் என்று கூறியுள்ளார் டாக்டர்சந்திரசேகர்.
டாக்டர் சந்திரசேகரிடம் அரசுத் தரப்பு வழக்கறிர் குறுக்கு விசாரணை செய்யவுள்ளார். இந் நிலையில் கொலைவழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜீவஜோதி ஆஜராகவுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications