மதவாதிகளின் கையில் நாடு: கருணாநிதி எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
தமிழகம், இந்தியாவும் மதவாதிகளின் கைகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். அதற்கு முன்பு அண்ணாநினைவு இல்லத்திற்குச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் ஸ்டாலின், துரைமுருகன்உள்ளிட்டோரும் இருந்தனர்.
பின்னர் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், நாட்டில் இப்போது என்ன நடந்து கொண்டுள்ளது என்பதுஉங்களுக்கேத் தெரியும். மதவாதிகளின் கையில் சிக்கும் அபாயத்தில் நாம் உள்ளோம். நமக்கு பாதுகாப்புஇல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதவாதிகளிடம் நாடு சிக்காமல் தவிர்க்க வேண்டுமானால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைஆதரியுங்கள்.
செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி குறித்து நான் அதிகம் கூறவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். தொடர்ந்து அவரது சேவையைப் பெற அவரையே தேர்ந்தெடுங்கள்என்று கூறினார் கருணாநிதி.
முன்னதாக சென்னை காமராஜர் சாலையில் மெரீனா கடற்கரையோரம் நேற்று மாலை வேன் மூலம் தனதுபிரச்சாரத்தைத் தொடங்கினார் கருணாநிதி. வேனுக்குள் அமர்ந்தபடி அவர் பேசுகையில், தண்ணீர்ப் பிரச்சினை சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே நிலவி வருகிறது.
திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை நகரை அழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறு பாலங்கள்,புதிய சாலைகள், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் (கோயம்பேடு பேருந்து நிலையம்) ஆகியவைதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவையே.
வாஜ்பாயை மீண்டும் பிரதமராக விட மாட்டேன் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முழங்கினார்.இப்போதோ, அவரை வாயாரப் புகழ்கிறார். இந்தியாவே வறுமையில் வீழ்ந்து கொண்டுள்ளபோது, இந்தியாஒளிர்வதாக பா.ஜ.க.வினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றார் அவர்.
கருணாநிதியின் பிரச்சாரத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கூட்டம் ஒத்திவைப்பு:
திருவண்ணாமலையில் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம்நேரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications