ஓட்டு கேட்க வந்த அதிமுக எம்.எல்.ஏவை விரட்டியடித்த கிராமம்
மதுரை:
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ. ராஜாங்கத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயராமன், எம்.எல்.ஏ. ராஜாங்கம் ஆகியோர் அடங்கிய அதிமுகவினர் ஏராளமான கார்களில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்க சென்றனர்.
எம்.மேட்டுப்பட்டி பகுதியில் அவர்கள் ஓட்டு கேட்க சென்றபோது திடீரென்று ஊர் மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஓட்டு கேட்க ஊருக்குள் வர வேண்டாம் என்று அவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் ஊருக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications