வைகோ வழக்கில் பொடா மறு ஆய்வுக் குழு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கு குறித்த பொடா மறுஆய்வுக் குழுவின் விசாரணைமுடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொடா சட்டத்தில் தன்னைக் கைது செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி பொடா மறுஆய்வுக் குழுவிடம் வைகோ மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது பல மாதங்களாக விசாரணை நடந்தது.நேற்று இந்த விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார் அக் குழுவின்தலைவரான நீதிபதி சஹார்யா.
அரசு சாட்சி திடீர் பல்டி:
இந் நிலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ மீதான பொடா வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகசேர்க்கப்பட்ட வாலிபர் தனது சாட்சியத்தை மாற்றி வைகோவுக்கு ஆதரவாகப் பேசினார்.
அரசுத் தரப்பில் சாட்சியாக ஆஜர் செய்யப்பட்டவர் சக்திவேல். மதுரை அருகே உள்ள கரிசல்பட்டியைச் சேர்ந்தஇவர் மதிமுக தொண்டர். அரசுத் தரப்பில் 39வது சாட்சியாக இவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
நேற்று இவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ஏற்கனவே கூறியிருந்த வாக்குமூலத்தை மறுத்து மாற்றிக்கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கூறுகையில், 2002ம் ஆண்டு ஜூன் 29ம் தேதிதிருமங்கலத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் வீடியோ படம் எடுப்பதற்காக வீடியோகிராபர் ரமேஷ்என்பவரை அழைத்து வருமாறு மாவட்ட மதிமுக செயலாளர் பூமிநாதன் என்னிடம் கூறினார்.
அதன்படி ரமேஷை நான் அழைத்து வந்தேன். கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர்கூறியபடி இதை நான் செய்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. போலீஸார்யாரும் என்னிடம் வந்து விசாரணை நடத்தவில்லை என்றார்.
வாக்குமூலத்தைக் கேட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் எழுந்து சாட்சியை மறு விசாரணை செய்யஅனுமதி கோரினார். நீதிபதி ராஜேந்திரன் அதற்கு அனுமதி அளித்தார்.
அப்போது, கூட்டத்தில் வீரஇளவரசன் கலந்து கொண்டது தெரியுமா, தெரியாதா என்று சக்திவேலிடம்ஜெயக்குமார் கேட்டார்.அதற்கு, வீரஇளவரசன் கலந்து கொண்டாரா, இல்லையா என்பது தனக்குத் தெரியாதுஎன்று பதிலளித்தார் சக்திவேல். மேலும், புதூர் பூமிநாதன் கூட்டத்தில் பேசியது குறித்தும் எனக்குத்தெரியாதுஎன்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications