வேட்பாளர் தேர்வில் பூகம்பம்: கமல்நாத்- வாசன் மோதல், வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி/சென்னை:

சோனியாவையும் மீறி, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் முற்றிலும்புறக்கணிக்கப்பட்டதால், வாசனின் ஆதரவாளர்கள் டெல்லி மற்றும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமைஅலுவலகங்களில் ஆர்ப்பாட்டத்திலும், கமல்நாத்தின் கொடும்பாவி எரிப்பிலும் ஈடுபட்டனர். இதனால்வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவேஅறிவிக்கப்பட்டு விட்டனர். மற்ற 8 பேர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது . இந் நிலையில் நேற்று இரவு8 பேருடைய பெயர்களும் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

தமிழக காங்கிரஸ் பார்வையாளர் கமல்நாத்தும் இளங்கோவனும் கோஷ்டி அமைத்துக் கொண்டு செயல்படுவதாகவாசன் குற்றம் சாட்டியதையடுத்து வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை ஆஸ்கர் பெர்னான்டஸ், தல்ஜித் சிங்போன்ற பொதுச் செயலாளர்களிடம் அளித்தார் சோனியா.

இதையடுத்து அவர்கள் வாசன் சொன்ன பெயர்களை பட்டியலில் சேர்த்தனர். ஆனால், இதற்கு கமல்நாத் எதிர்ப்புதெரிவித்தார். இதையடுத்து கமல்நாத்தையும் வைத்துக் கொண்டு பட்டியலை உருவாக்க சோனியா உத்தரவிட்டார்.

அப்போது வாசன் சொன்ன பெயர்களை பட்டியலில் சேர்க்க கமல்நாத் மறுத்ததார். வாசனின் ஆதரவாளரானஎன்.எஸ்.வி.சித்தனுக்கு (திண்டுக்கல்) மட்டுமே சீட் தர முடியும் என கமல்நாத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இளங்கோவன், திருநெல்வேலி- குமரிஅனந்தனின் தம்பி வசந்தகுமார், பழனியில்வழக்கறிஞர் ஆர். காந்தி, பழனி, ராசிபுரத்தில் ஜெயக்குமார், சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்சிதம்பரம், பெரியகுளத்தில் ஜே.எம்.ஆரூண், சேலத்தில் தங்கபாலு ஆகியோர் நிறுத்தப்படுவர் என்று கமல்நாத் கூற,இதில் ஒருவர் கூட தனது ஆதரவாளர்கள் இல்லை என்பதால் அதை ஏற்க வாசன் மறுத்தார்.

மேலும் கட்சியிலேயே இல்லாத ப.சிதம்பரத்துக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதை எதிர்த்த வாசன்,அவருக்கோ அல்லது அவரது மகனுக்கோ சிவகங்கையை ஒதுக்கித் தருவதே தவறு என்றார்.

ஆனால், வாசனின் கருத்தை கமல்நாத் ஏற்க மறுக்க, இதனால் கோபமடைந்த வாசன் அந்தக் கூட்டத்தில்வெளிநடப்பு செய்தார். அவருடன் ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் வெளிநடப்பு செய்தனர்.

இந்தத் தகவலை சென்னையிலும் டெல்லியில் முகாமிட்டிருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் வாசன் தெரிவிக்க,இரவிலேயே போராட்டம் வெடித்தது.

வாசனின் வெளிநடப்பை சற்றும் எதிர்பார்க்காத அகில இந்திய பொதுச் செயலாளர்களும் வேட்பாளர் பட்டியல்வெளியிடுவதை நிறுத்தி விட்டு சோனியாவைப் பார்க்க விரைந்தனர்.

இதையடுத்து வாசனின் ஆதரவாளர்கள் தமிழகத்தில் போராட்டத்தில் இறங்கினர். கமல்நாத் விலை போய்விட்டார், தமிழக காங்கிரஸான் உணர்வுகளை மதிக்காமல் ஒட்டுமொத்தமாக காலில் போட்டு மிதித்து விட்டார்என்று கூறி அவரது உருவப் பொம்மையை சத்தியமூர்த்தி பவன் வாசலிலேயே காங்கிரசார் எரித்தனர்.

இதே போல தமிழகம் முழுவதுமே கமல்நாத்துக்கு எதிராக வாசன் ஆதரவாளர்கள் இரவில் போராட்டம் நடத்தினர்.கமல்நாத் போஸ்டர்களுக்கு செருப்படி கொடுத்தனர்.

டெல்லியில் முகாமிட்டிருக்கும் வாசனின் ஆதரவாளர்களும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் முன்பு குழுமிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் எம்.பிக்களான தனுஷ்கோடி ஆதித்தன்,ராம்பாபு, அன்பரசு, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராணி, கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இவர்கள்கமல்நாத்தின் கொடும்பாவியையும் எரித்தனர்.

சென்னையில் வாசனின் ஆதரவு தொண்டர்கள் கூறுகையில், பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களைதன்னிஷ்டப்படி முடிவு செய்துள்ளார் கமல்நாத். தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? சொந்தமாநிலமான மத்தியப் பிரதேசத்திலேயே ஜெயிக்க முடியாத கமல்நாத், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு மூடு விழாநடத்தினார். இப்போது தமிழகத்திலும் காங்கிரஸை குழி தோண்டிப் புதைக்க பார்க்கிறார் என்றனர் ஆவசேத்துடன்.

வாசன் தரப்பின் இந்த எதிர்ப்பு காரணமாக அவரது ஆதரவாளர்களில் மேலும் இருவருக்கு சீட் ஒதுக்கிபிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க சோனியா முயல்வார் என்று தெரிகிறது. பிரச்சாரத்தில் இருக்கும் சோனியாசனிக்கிழமை டெல்லி திரும்பிய பின்னரே தமிழக வேட்பாளர்களின் புதிய பட்டியல் இறுதியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+