"இவர்களுக்கும்" வாக்குரிமை!
சென்னை:
அரவாணிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. அவர்கள் ஆணா, பெண்ணா என்பதை அவர்கள்தான்தீர்மானிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அரவாணிகளுக்கு வாக்குரிமை உள்பட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி தமிழக பெண்கள்கூட்டமைப்பின் மதுரை வழக்கறிஞர் ரஜினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்செய்தார்.
அந்த மனுவில் தமிழகத்தில் 1.5 லட்சம் அரவாணிகள் உள்ளனர். இவர்களுக்கு வாக்குரிமை இல்லை. ரேஷன்கார்டு போன்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. இவர்களுக்கு இந்த சமூக அடிப்படை வசதிகளைவழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,அரவாணிகளுக்கும் வாக்குரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் வாக்குரிமை குறித்துதொலைக்காட்சிகள், செய்தித் தாள்களில் அரசு முறையாக விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
தாங்கள் ஆணா, பெண்ணா என்பதை அரவாணிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அதன்படி தங்களதுபெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு டிவி மற்றும் செய்தித்தாள்களில்அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications