அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும்
சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் முழுமையாக தொடங்கும் முன்பே அனல் வீசுகிறது. குறிப்பாக வேலூர், அரக்கோணம்,சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெயில் அடிக்கிறது.
மேற்கண்ட பகுதிகளில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் உள்ளது.இதனால் மக்கள் கடும்அவதிக்குள்ளாகியுள்ளனர். இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சிநிலைய இயக்குனர் ரமணன்,
சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு இடம் மாறியுள்ளதால், தற்போது பூமியின் வட பாகத்தில் உள்ளதமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய ஒளிக் கதிர்கள் சாய்வாக இல்லாமல் நேராக பூமி மீது விழுகின்றன. இதன்காரணமாகவே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.
இன்னும் சில நாட்களில் காற்றின் திசை மாற்றமும் பாதமாக இருக்கும் என்பதால் வெயில் மேலும் அதிகமாகவேஇருக்கும்.
எப்போதும் குளுமையா காணப்படும் கோவை, பொள்ளாச்சி போன்ற ஊர்களில் கூட தற்போது 100 டிகிரிக்குமேல் வெயில் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை பற்றிக் கூறவே வேண்டாம். கடும்வெயிலுடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையும் சேர்ந்து மாநகர மக்களை வதைத்து வருகின்றன
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications