தமிழகத்தில் பலமான ஜெ எதிர்ப்பு அலை வீசுகிறது: வைகோ
சென்னை:
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். எங்கு நோக்கினும் ஜெயலலிதாவுக்கு எதிரான அலைவீசிக் கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பிரதமர் வாஜ்பாயுடன் வாதாடி அதைக்காத்தேன். இதன் மூலம் 50,000 தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுத்தேன். 153 போஸ்டல்தொழிலாளர்களுக்கு வேலையை நிரந்தரம் செய்ய வைத்தேன்.
காவிரிப் பிரச்சனைக்காக எத்தனையோ முறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். சிவகாசி நான் செய்தபணிகளை மக்களிடம் போய் கேட்டால் சொல்வார்கள்.
மலேசியாவிலும் மாலத்தீவிலும் மரணத்தின் பிடியில் இருந்த தமிழர்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம்காத்தேன். இப்படி நான் செய்த பணிகள் எத்தனையோ. ஆனால், நான் மக்களுக்கு என்ன செய்தேன் என்றுஓட்டை ரெக்கார்ட் மாதிரி ஜெயலலிதா போன இடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஊரை அழித்து உலையில் போட்டு கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தவர் தான் இந்த ஜெயலலிதா. இந்தக்கொள்ளைக்காரியின் சொத்து வழக்கைத் தான் இப்போது உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு மாற்றியிருக்கிறது.அதில் தீர்ப்பு வந்தால் ஜெயலலிதா தேர்தலில் கூட நிற்க முடியாது.
டான்சி வழக்கில் தனது கையெழுத்தையே தன்னுடையதல்ல என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்னவர் இந்தஜெயலலிதா. அதை நீதிமன்றமே சுட்டிக் காட்டியது. பொய் பேசுவது ஜெயலலிதாவுக்கு மிக வழக்கமாகிவிட்டது.
இந்த ஊழல் ராணிக்கு எதிராக தீர்ப்பு தரப்பட்டதற்காக தர்மபுரியில் பஸ்ஸை எரித்து 3 அப்பாவி மாணவிகளைஎரித்தார்க் அதிமுகவினர். இதற்கு வருத்தமாவது பட்டாரா ஜெயலலிதா?
பத்திரிக்கைகளை அடக்குவது, எதிர்க் கட்சிக்காரனை சிறையில் போடுவது என கோரதாண்டவம் நடத்திக்கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சியில் இருப்பதே வெட்கக்கேடானது. அவரது அரசாங்கத்தில் போலீஸ் கூடகாட்டுக் கொள்ளையர்களாகவே நடந்து கொள்கிறார்கள்.
நாடாறு மாதாம், காடாறு மாதம் என்று தனது ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துக்கு தோழியுடன் ஓய்வெடுக்கப்போய்விடும் ஜெயலலிதாவுக்கு பண்பாடோ, நெறிமுறைகளோ ஏதும் கிடையாது.
அவருக்கு எதிராக மிக பலமான அலை தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. இதை பிரச்சாரத்திற்கு நான் போகும்இடத்தில் எல்லாம் கண்கூடாகப் பார்க்கிறேன். இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மரண அடி கிடைக்கப் போவதுமட்டும் நிச்சயம்.
சோனியா காந்தியை அரசியல்ரீதியாக விமர்சிக்காமல் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும்ஜெயலலிதாவின் செயல் ஈனத்தனமானது. இது தமிழ்ப் பண்பாடே இல்லை. பதி பக்தி பற்றி ஜெயலலிதாபேசலாமா? தனது தரக்குறைவான பேச்சுக்களால் மக்கள் மத்தியில் அசிங்கப்படப் போகிறார் ஜெயலலிதா என்றார்வைகோ.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications