காங். வேட்பாளர்கள் தேர்வு கலாட்டா: சோனியாவிடம் பேசிய கருணாநிதி
சென்னை:
காங்கிரசில் சீட் கேட்டு அக் கட்சியினர் செய்து வரும் கலாட்டாக்களால் திமுக தலைவர் கருணாநிதிகடுப்படைந்துள்ளார். இது தொடர்பாக சோனியா காந்தியிடமும் அவர் பேசியதாகத் தெரிகிறது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களில், தனது ஆதரவாளர்களுக்கு குறைந்தபட்சம் 6 இடங்கள் கேட்டு வந்தார்வாசன். ஆனால், ஒரே ஒரு இடம் தான் (என்.எஸ்.வி. சித்தன்- திண்டுக்கல்) ஒதுக்கப்பட்டது.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த வாசன், என் தலைவர்பதவியையும் ராஜினாமா செய்துவிடுவேன் என மிரட்டினார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும்முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக நேற்று காங்கிரஸ் வெளியிட்ட 15 பேர் கொணட நான்காவது வேட்பாளர் பட்டியலில் தமிழகவேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந் நிலையில் திருநெல்வேலியை குமரிஅனந்தனின் தம்பி வசந்தகுமாருக்கும், பழனியை வழக்கறிஞர் ஆர்.காந்திக்கும், ராசிபுரத்தை அட்சரே இல்லாத ஜெயக்குமாருக்கும் ஒதுக்கியதையும் கேள்விப்பட்டு கருணாநிதியும்கடுப்பாகிவிட்டதாகத் தெரிகிறது.
ஒசூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கருணாநிதி தொலைபேசியில் சோனியாவைத் தொடர்பு கொண்டுபேசியுள்ளார். அப்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும், கூடாது என்பதை முடிவு செய்ய உங்களுக்கு(சோனியா) அதிகாரம் உண்டு. ஆனால், பழனி, நெல்லை, ராசிபுரத்திற்கு நீங்கள் இறுதி செய்துள்ளதாகக்கூறப்படும் மூவர் குறித்தும் எனக்கு உடன்பாடில்லை.
இந்த மூவரும் தான் வேட்பாளர்கள் என்றால் நான் அவர்களுக்காக பிரச்சாரத்துக்குப் போக மாட்டேன் என்றுகூறிவிட்டாராம். இந்த மூன்று தொகுதிகளில் இருந்து திமுகவினர் கொடுத்த பீட்-பேக்கை வைத்தே கருணாநிதிசோனியாவிடம் பேசியதாகத் தெரிகிறது.
வசந்த்குமார் காங்கிரசில் இருந்தாலும் அவர் கட்சி வேலையை விட தனது தொழிலில் தான் அதிக கவனம் செலுத்திவருகிறார். மேலும் தொண்டர்கள் மத்தியில் சுத்தமாக இவருக்கு ஆதரவில்லை. இவரது தேர்தல் வேலையைதிமுகவினர் பார்த்தால் தான் உண்டு.
இவராவது பரவாயில்லை, கட்சியில் இருக்கிறார். ஆனால், பழனி தொகுதியில் போட்டியிடும் காந்திகாங்கிரஸ்காரரே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் தூக்கி சுமக்க வேண்டிய நிலையில் இருப்பதுதிமுகவினர் தான்.
அதே போல ராசிபுரம் ஜெயக்குமாருக்கு மக்களிடம் சுத்தமாக அறிமுகம் கிடையாது. இவருக்கு நாங்கள் என்னவேலை பார்த்தாலும் தேற்ற முடியாது என அப் பகுதி திமுகவினர் கருணாநிதிக்குத் தகவல் தந்துள்ளனர்.
இந்த விவரங்களை வைத்துக் கொண்டு தான் சோனியாவிடம் கருணாநிதி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications