ஜெயலலிதாவுக்கு பதியும் தெரியாது.. பக்தியும் தெரியாது... :கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

இந்தியா இருளில் மூழ்கியிருப்பது பிரதமர் வாஜ்பாய்க்குத் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதி திமுக வேட்பாளர் சுகவனத்துக்கு ஆதரவாக ஓசூரில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில்கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த 2, 3 ஆண்டுகளாக தமிழகத்தை கவ்வியிருக்கும் ஜெயலலிதா என்ற இருள் இப்போது இந்தியாமுழுமைக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஆனால் இந்தியா ஒளிர்கிறது என்று துணைப் பிரதமர் அத்வானி சொல்கிறார். இந்தியா இருளில் தான் இருக்கிறதுஎன்பது வாஜ்பாய்க்குத் தெரியும். அதனால் தான் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து காத்திருப்பதாகவும் அதைதடுக்கவே மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் வாஜ்பாய் பேசியிருக்கிறார்.

ஒளிர்கிற இந்தியாவுக்கு எப்படி ஆபத்து வரும் என்பதை கவிஞரான வாஜ்பாய் தான் விளக்கமளிக்க வேண்டும்.இந்த இருள் விலக உதயசூரியனுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

மத்திய அரசு 8.4 சதவீதத்தை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியாக காட்டுகிறது. உண்மையில் அகில இந்தியபொருளாதார ஆய்வு குழுவின் புள்ளி விவரப்படி இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி 5.5 சதவீதம்தான்.

உண்மையில் இந்தியா ஒளிர வில்லை. இந்தியா இருட்டில் முழுகுகிறது. இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களில்40 சதவீதச் பேருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள் அத்தனை பேரும் கைநாட்டு பேர்வழிகள். 100 கோடிமக்களில் 33 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக கிடைக்கிறது. 14 கோடி மக்களுக்கு அடிப்படை வசதிகள்இல்லை. 23 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. மலேரியா, காசநோயால் ஆண்டு ஒன்றுக்கு 4லட்சம் பேர் இறக்கிறார்கள். எய்ட்ஸ் நோயால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

35 நிமி-டத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். 42 நிமி-டத்துக்கு ஒரு பெண் கடத்தப்படுகிறாள். 93 நி-மிடத்துக்குஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறாள். வறட்சியினால் பயிர்கள் கருகி வருகின்றன. திருப்பத்தூரில் கைத்தறிதொழிலும் அழிந்து வருகிறது. நெசவாளர்கள் பட்டினி கிடக்கிறார்கள். இப்படி உண்மை நிலை இருக்கையில்இந்தியா ஒளிர்கிறது என்பதை எந்த பைத்தியக்காரனாவது ஒத்துக் கொள்வானா?

நாங்கள் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று அதிமுக தனது தேர்தல்அறிக்கையில் கூறியுள்ளது. இருக்கிற வேலையை இந்த அரசு பறிக்காமல் இருந்தால் போதாதா?

இந்த ஆட்சியில் 999 பேர் டிஸ்மி-ஸ் செய்யப்பட்டனர். 9 என்றால் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான எண். தேர்தல்வந்ததால் 999 பேருக்கு வேலை கிடைத்தது.

வெளிநாட்டு பெண்மணி, பதிபக்தி இல்லாத பெண்மணி என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றி நாக்கில்நரம்பில்லாமல் பேசி வருகிறார். பதிபக்தியை பற்றி ஜெயலலிதா பேசுவதுதான் வேடிக்கை. அவருக்கு பதியும்தெரியாது பக்தியும் தெரியாது.

சோனியாவை அவர் பழிப்பது சூரியனைப் பார்த்து ஓணான் பழிப்பதைப் போல் உள்ளது. இது பற்றி தேர்தல்ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று தேர்தல் ஆணையம்சொல்கிறது. சோனியாவுக்கு பதிபக்தி உள்ளதா என விசாரிக்கிறதா தேர்தல் ஆணையம்?

மதவாத சக்திகளை ஒழிக்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+