தேர்தல்: விமானங்களில் பறக்கும் கோடிகள்
டெல்லி:
விமானப் பயணிகள் அதிகளவு பணத்தைக் கொண்டு செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும்படி விமானபோக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பாளர்களுக்குக் கொடுக்கவும், தேர்தல் செலவுகளுக்காகவும் கட்சித் தலைமைகள் இடமிருந்தும்,தொழிலதிபர்களிடம் இருந்தும் கலெக்ட் செய்யப்படும் கோடிக்கணக்கான பணம் விமானங்கள் மூலமாக நாடுமுழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெல்லி, மும்பையில் இருந்து ஏராளமான பணம் அனுப்பப்பட்டு வருகிறது. அதே போல சென்னை,பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்தும் பல்வேறு கட்சித் தலைமைகளுக்கு தொழிலதிபர்கள்அனுப்பும் பணம் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது இதைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், பயணிகள் கொண்டு வரும் பைகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் உள்ளதா என்றுபரிசோதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரம், அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வசம்வழங்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கொண்டு செல்லும் பயணிகள் குறித்த தகவல்கள் உடனடியாக பதிவுசெய்யப்படும். அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கம் போதுமானதாக இல்லாவிட்டலோ, அதுதேர்தலுக்காக கொண்டு செல்லப்படும பணமாக இருந்தாலே அந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் தலையிடும்.
அதே போல ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த பலருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் லண்டன் சென்று வர இலவசபாஸ்களை வழங்கியுள்ளது குறித்தும் தேர்தல் கமிஷன் கடுப்படைந்துள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் யார்,யாருக்கு இலவச பாஸ் தரப்பட்டது என்ற விவரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏர் இந்தியாவுக்குதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications