ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை: 3வது பாலினம் தேவை- அரவாணிகள் கோரிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் தங்களை ஆணாகவோ அல்லதுபெண்ணாகவோ குறிப்பிட விரும்பவில்லை என்றும்மாறாக 3வது பாலினமாக தங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அரவாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவாணிகளுக்கும் வாக்குரிமை உண்டு. வாக்காளர் பட்டியலில் அவர்களையும் சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தாங்கள் ஆணா, பெண்ணா என்பதை அரவாணிகள் விருப்பப்படி வாக்காளர்அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்ட அறிவிப்பில், மக்கள்பிரதிநிதித்துவ சட்டப்படி அரவாணிகளுக்கும் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க பயன்படுத்தப்படும் படிவம் 6-யை சமர்ப்பித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில்அரவாணிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், தங்களது பாலினத்தை குறிப்பிடும்போது ஆணா அல்லது பெண்ணா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் அவர்கள் ஆண் அல்லது பெண் என்றே குறிப்பிடப்படும், அரவாணிஎன்று குறிப்பிடப்படாது என்று கூறியுள்ளார் சாரங்கி.
இந் நிலையில் தங்களை ஆணாகவோ, பெண்ணாகவோ காட்டிக் கொள்ள விரும்பவில்லை, மாறாக 3வதுபாலினமாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அரவாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் ஆண் என்றோ அல்லது பெண் என்றோ குறிப்பிட்டால் பின்னாளில் அது பல்வேறுகுழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் வழி வகுத்துவிடும். எனவே 3வது பாலினத்தை உருவாக்கி தங்களைஅதில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடவும் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.தென்னிந்திய பெண்கள் கூட்டமைப்பு இதறகான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதவிர தமிழகம் முழுவதும் தங்களுக்கென தனி காலனிகளைக் கட்டித் தர வேண்டும் என்றும் அரவாணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications