தேர்தலில் வென்றவுடன் மீண்டும் புலிகளுடன் பேச்சுவார்த்தை: ரணில்
கொழும்பு:
அடுத்த வாரம் தேர்தலில் வென்ற கையோடு, உடனடியாக விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைமீண்டும் தொடங்க நான் உறுதியுடன் இருக்கிறேன் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் தேர்தலில் எங்களது கட்சி மீண்டும் வெல்வது நிச்சயம். மீண்டும் அரசை அமைத்தவுடன்ஏப்ரல் மாதத்துக்குள்ளாகவே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என்ற உறுதியுடன்இருக்கிறேன்.
ஒழுங்காக நடந்து கொண்டிருந்த அமைதி முயற்சிகளை கெடுத்தததே அதிபர் சந்திரிகா குமாரதுங்காதான்.
வட கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி என்ற புலிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தான் நாங்கள் நடத்தும்பேச்சுவார்த்தை இருக்கும். அதே நேரத்தில் புலிகள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்போம் என்று அர்த்தமல்ல.அதே போல நாங்கள் சொலவதை எல்லாம் புலிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் நிர்பந்திக்க மாட்டோம்.
எனது அரசு ஆட்சிக்கு வந்து நாட்டில் அமைதியைக் கொண்டு வந்தது, போரை நிறுத்தி ரத்த ஆறு ஓடுவதைத்தடுத்தது, பொருளாதாரத்தையும் மீண்டும் சீர் செய்ய ஆரம்பித்தது. இந் நிலையில் தான் எனது ஆட்சியை 4ஆண்டுகளுக்கு முன்னதாகவே கலைத்து எல்லாவற்றையும் கெடுத்தார் சந்திரிகா.
அடுத்த வாரம் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்றார் ரணில்.
இன்று (25ம் தேதி) ரணிலுக்கு 55வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications