மதிமுகவின் பிரியாணி விருந்து
திருச்சி:
திருச்சி மதிமுக வேட்பாளர் எல்.கணேசன் நடத்திய தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்ற கூட்டணிகட்சியினர் சுமார் 10,000 பேருக்கு சிக்கன் வறுவலுடன் பிரியாணி விருந்து படைக்கப்பட்டது.
தொண்டர்களை தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபடுத்த அதிமுகவினர் பிரியாணி விருந்து படைப்பது வழக்கம்.அதிமுக பாணியை இப்போது அனைத்துக் கட்சிகளும் பின்பற்றத் துவங்கியுள்ளன.
அது போன்ற ஒரு விருந்தை திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் எல்.கணேசன் கூட்டணிக் கட்சியினருக்குபடைத்துள்ளார். தேர்தல் பணியில் கணேசன் சுணக்கம் காட்டுவதாக கூட்டணி கட்சியினர் விரக்தியில் இருந்தனர்.இதை சரிக்கட்டத்தான் மெகா விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக திருச்சி மதிமுகவினர் கூறுகின்றனர்.
திருச்சி திண்டுக்கல் ரோட்டில் உள்ள எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில் இந்த விருந்து நடத்தப்பட்டது. கூட்டநெரிசலைத் தவிர்க்க அருகில் இருந்த அரிஸ்டோ திருமண மண்டபமும் மதிமுகவினரால் முன்பதிவுசெய்யப்பட்டது. திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலுள்ள கூட்டணிக்கட்சியினருக்கு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதிலிருந்து விருந்தும் பரிமாறலும் நடைபெற்றது. நேரம் செல்ல, செல்லகூட்டம் அதிகரித்து. பலரும் குடும்பத்தோடு வந்துவிட்டதால் முன்னாள் அமைச்சர் நேரு வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கையில் கம்புடன் தொண்டர்களை ஒழுங்கும்படுத்தும் பணியில் இறங்கினார்.
விருந்தில் அன் லிமிட்டட் சிக்கன் பிரியாணி, முட்டை, மட்டன் , அரிசி சாதம், தயிர் ஆகியவையும்பரிமாறப்பட்டன. இரண்டு மணி நேரத்தில் பிரியாணி முழுவதும் தீர்ந்து போனதால் அவசர, அவசரமாக குஸ்காதயாரித்து பரிமாற வைத்தார் கணேசன். வந்த யாரும் சாப்பிடாமல் போகக் கூடாது என்றவாரே சுற்றிச் சுற்றிவந்தார் கணேசன்.
7,000 பேருக்கு கணக்கு வைத்து பிரியாணி தயாரித்தோம். ஆனால் 10,000க்கும் மேற்பட்டோர் வந்ததால்சமாளிக்க முடியவில்லை என்று மதிமுகவினர் கூறினர்.
இந்த விருந்துக்கான மொத்த செலவையும் மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினரான சேக் முகமது ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னாடை அணிவித்து கணேசன் நன்றி செலுத்தினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications