பொடா வழக்கு: குரல் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தார் வைகோ: அரசுத் தரப்பு சாட்சியம்
சென்னை:
குரல் பரிசோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒத்துழைக்க மறுத்ததாக பொடா வழக்கில் அரசுத்தரப்பில் ஒருவர் சாட்சியம் தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக வைகோஉள்ளிட்டவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள பொடாநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான வேலூர் தாசில்தார் மோகன்ராஜ்கூறுகையில், வைகோவிடம் குரல் பரிசோதனை நடத்துவதற்காக நானும் விசாரணை அதிகாரி லியோ என்பவரும்வேலூர் சிறைக்குச் சென்றோம்.
அங்கு வைகோவிடம் குரல் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறினோம். இது தொடர்பான அறிக்கைஒன்றையும் தயார் செய்து வைகோவிடம் கொடுத்தோம். அதைப் படித்துப் பார்த்து விட்டு அவர் கையெழுத்துப்போட்டார்.
இருப்பினும், குரல் பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. இப்படிச் செய்தால் ஏற்படும் விளைவுகள்குறித்துத் தெரியுமா என்று வைகோவிடம் அதிகாரி லியோ கேட்டபோது, எனக்குத் தெரியும் என்று வைகோபதிலளித்தார். பின்னர் குரல் பரிசோதனையைக் கைவிட்டு விட்டு வந்துவிட்டோம் என்றார் தாசில்தார்மோகன்ராஜ்.
பின்னர் வைகோ தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ், மோகன்ராஜிடம் குறுக்கு விசாரணை செய்தார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications