கமல்நாத் கொடும்பாவி எரிப்பு தொடர்கிறது: வேண்டாமே என்கிறார் வாசன்
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகில இந்திய காங்கிஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்தின் கொடும்பாவியைஜி.கே.வாசன் ஆதரவு காங்கிரஸார் கொளுத்தி வருகின்றனர். இதை வாசன் கண்டித்துள்ளார், அமைதியாகஇருக்குமாறு தொண்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் வாசன் ஆதரவாளர்களை சுத்தமாக புறக்கணித்து விட்டு எதிர் முகாம்களைச்சேர்ந்தவர்களுக்கு கமல்நாத் பரிந்துரையின் பேரில் கட்சி மேலிடம் சீட் கொடுத்தது. இதையடுத்துஅதிருப்தியடைந்த வாசன், கட்சி மேலிடத்துடன் நடந்த பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள வாசன் ஆதரவு காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில்உள்ள சத்யமூர்த்தி பவனில் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சென்னை, மதுரை, திருச்சி,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கமல்நாத்தின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாகபலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வாசன் டெல்லியிலிருந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கட்சித் தொண்டர்கள் யாரும்போராட்டம் நடத்தக் கூடாது, உண்ணாவிரதம், கொடும்பாவி எரிப்பு ஆகியவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும். அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications