தத்துவ பச்சோந்திகள்: ஜெ. பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் தத்துவ பஞ்சோந்திகள் என்ற முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா நாகரிகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகிறார். காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை அரைவேக்காடு, கத்துக்குட்டி என்கிறார். அதற்கும் மேலாக ஜெயலலிதா பதிபக்திபேசுகிறார். அதுதான் கவலையாக இருக்கிறது.

கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் தத்துவ பஞ்சோந்திகள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதற்கு பதில்தருவதற்காக நான் அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க விரும்ப வில்லை. அடிக்கின்ற காற்றில் நிறம்மாறுபவர்தான் ஜெயலலிதா.

அவர் செய்த சாதனைகளை பேசட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். ஆனால்தனிப்பட்ட விமர்சனம் மூலம் வாக்காளர்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டு உள்ளது. பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பிரசாரத்தில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தின்போது மின்சாரம் திருடப்படுகிறது. இதைதேர்தல் ஆணையம் உடனடியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வருகிற 28ந்தேதி ஏற்பாடு செய்துள்ள தேச பாதுகாப்பு மாநாடுக்குகாவல்துறை அனுமதி அளித்துள்ளது. 1998 ம் ஆண்டு ராமகோபாலனால் கோவையில் ஏற்பட்ட மதக்கலவரம்ஏற்பட்டது. அதனையடுத்து கோவை நாடாளுமன்ற தேர்தலே நிறுத்தப்பட்டது.

அப்போது இதே அரசு கோவையில் ராமகோபாலன் நுழைவதற்கு அனுமதி மறுத்தது. இப்போது தேர்தல்ஆதாயத்திற்காக இதை அனுமதித்துள்ளது. தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டுமாநாட்டை ரத்து செய்ய வேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன், புதிய தமிழகம் அமைப்பின் தலைவர்கிருஷ்ணசாமி ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டசை அழைத்துபிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இது தலித் மக்களுக்கு துரோகமாக அமையும் என்றார் வரதராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+