மன்மோகனுடன் பேச்சு: காங். பிரச்சனையை தீர்ப்பதில் கருணாநிதி தீவிரம்
பெங்களூர் & டெல்லி:
காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு பூசலைத் தீர்க்கும் முயற்சியில் திமுக தலைவர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
வேட்பாளர் தேர்வு விஷயத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் வாசனின் கருத்துக்கள் நியாயமாக இருப்பதாகக்கருதும் கருணாநிதி அது தொடர்பாக சோனியாவுடன் பேசினார். அப்போது பழனி, ராசிபுரம் உள்ளிட்டதொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குடனும் கருணாநிதி பேசி வருகிறார். ஒசூரில் தனதுதேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பெங்களூர் வந்த கருணாநிதி, அங்குள்ள தனது மகள் செல்வியின் வீட்டில்ஓய்வெடுத்து வருகிறார். இன்று மீண்டும் அவர் சென்னை திரும்புகிறார்.
பெங்களூரில் கட்சியினர் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்துவிட்ட கருணாநிதி, காங்கிரஸ் பூசலைத் தீர்க்கும்வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இளங்கோவன் தரப்பினருடன் தான் பேசி அவர்களைஅமைதிப்படுத்துவதாகவும், வாசனின் நியாயமான கோரிக்கைகளை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொள்வதேநல்லது என்று கருணாநிதி எடுத்துச் சொன்னதாகத் தெரிகிறது.
இதையடுத்து வாசனின் ஆதரவாளர்கள் மேலும் இருவருக்கு சீட் தரப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படலாம் என டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 31ம் தேதிக்குள் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலைஅறிவித்துவிடுவோம் என கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைமை உறுதியளித்துள்ளது.
சிதம்பரத்துக்கு சீட் கொடுப்பது குறித்து கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைமை விவாதித்ததாகவும், அதில் நான்தலையிட விரும்பவில்லை, அது உங்கள் இஷ்டம் என்று கருணாநிதி கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications