வெறும் 20 மார்க்: மக்களிடம் பெயில் ஆன ஜெ
டெல்லி:
தேசிய அளவில் கருத்துக் கணிப்பில், நாட்டிலேயே மிக மோசமான முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார்.
தேர்தல் கருத்துக் கணிப்பியல் நிபுணர் பிரணாய் ராய், மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், முன்னணி கருத்துக் கணிப்புநிறுவனமான ஏசி.நீல்சன் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் சராசரியாக நூற்றுக்கு 47 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் பிற மாநிலமுதல்வர்கள். ஆனால், ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வெறும் 20 மதிப்பெண்கள் தான் வழங்கியுள்ளனர்.
நாட்டிலேயே மிக மோசமான ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் பிகாரில் கூட அம் மாநில முதல்வர் ராப்ரி தேவிக்கு 45க்கும் மேலாகமதிப்பெண் வழங்கியுள்ளனர் பிகார் மக்கள்.
மக்களிடம் வெறும் 20 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஜெயலலிதா தான் இந்தியாவிலேயே மகா மட்டமான முதல்வர் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா காவிரிப் பிரச்சனையை கையாண்ட விதம், பொடா மற்றும் வைகோவை சிறையில் அடைத்த விவகாரம், ஆடு,கோழி பலியிடத் தடை விதித்தது, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது என எதையும் மக்கள் ஏற்கவில்லைஎன்பதும் கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்குமே மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகவே கருத்து கூறியுள்ளனர்.
குறிப்பாக கோவில்களில் பலியிடத் தடை விதித்தது, திராவிட பாரம்பரியத்துக்கு எதிராக மத விஷயத்தில் ஜெயலலிதா காட்டும்தீவிரம் ஆகியவை அவருக்கு எதிராக பூமராங் ஆகியுள்ளன.
அதே போல காவிரியும், வைகோவும்தான் ஜெயலலிதாவை கவிழ்த்து விட்டன.
ஜெயலலிதாவின் அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் மொத்தமே 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் தான் வெற்றிகிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications