தயாநிதிக்கு அமைச்சர் பதவி கேட்டேனா?: ஜெவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனுக்கு நான் மத்திய அமைச்சர் பதவி கேட்டதாகவும் அதைத் தராததால் தான்கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் முதல்வர் ஜெயலலிதா பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முரசொலி மாறன் இறந்த பிறகு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர்வாஜ்பாய், மாறன் இடத்தில் யாரை அமைச்சராக்கலாம் என்று கேட்டார். அதுகுறித்து விவாதித்து பின்னர் தெரிவிப்பதாக நான்கூறினேன்.
பின்னர் மாறன் இறந்து ஒரு வாரம் கழித்து சென்னை வந்த வெங்கையா நாயுடுவும் பிரதமரின் கேள்வியை நினைவுபடுத்தினார்.அப்போதும் பின்னர் கூறுவதாக தெரிவித்துவிட்டேன்.
உண்மை இவ்வாறிருக்க தயாநிதி மாறனுக்கு நான் அமைச்சர் பதவி கேட்டதாகவும், அது கிடைக்காததால்தான் கூட்டணியைவிட்டு விலகியதாகவும், ஜெயலலிதா மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த குமாரவேலு ஆகியோர் கூறி வருகிறார்கள்.
இது திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் ஆகும். இதுகுறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவிவாதித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ஏப்ரலில் -- 2வது கட்டப் பிரசாரம்:
இந் நிலையில் கருணாநிதியின் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னை சைதாப்பேட்டையிலிருந்துதொடங்குகிறது.
கடற்கரையிலிருந்து தொடங்கிய முதல் கட்டப் பிரசாரம் ஓசூரில் முடிவடைந்தது. தற்போது அவர் பெங்களூரில் தனது மகள்வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்பே சென்னை திரும்ப இருந்த அவர் திட்டத்தைஒத்திவைத்துவிட்டு ஓய்வில் இருக்கிறார்.
ஏப்ரல் 8ம் தேதி அவர் தனது இரண்டாவது கட்டப் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் பிரச்சாரம்செய்யும் கருணாநிதி, ஏப்ரல் 14ம் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் பொதுக் கூட்டத்துடன் 2வது கட்டப் பிரசாரத்தை முடிக்கிறார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications