புதுவை: காவல் நிலையத்தில் ரெளடி வெட்டிக் கொலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் காவல் நிலையத்திற்குள் வைத்து ரெளடியை வெட்டிக் கொன்ற கும்பல், போலீஸாரையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றது.
பாண்டிச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக புதுவை தெற்கு மாவட்ட காவல்துறை தீவிரவிசாரணை மேற்கொண்டுள்ளது.
முதலியார்பேட்டை, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். பெரிய ரெளடி. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்படமொத்தம் 8 வழக்குகள் உள்ளன. இவருக்கும் வெங்கடேஷ் (ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் இவர் மீது உள்ளன)என்ற மற்றொரு ரெளடிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நவக்குளம் என்ற இடத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக இந்த முன்விரோதம் அதிகரித்தது. இந்நிலையில், வெங்கடேஷ் கோஷ்டியைச் சேர்ந்த 5 பேர் ஜெயக்குமாரைக் கொலை செய்யும் முயற்சியுடன் அவரது இருப்பிடத்திற்குவந்தனர்.
கொலைக் கும்பலைப் பார்த்ததும் ஜெயக்குமார் ஓட்டம் எடுத்தார். ஆனால் விடாமல் துரத்தியது கொலைக் கும்பல். பயந்து போனஜெயக்குமார் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குள் புகுந்தார். காவல் நிலையத்திற்குள் ஜெயக்குமார் நுழைந்தாலும்அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாத கொலைக் கும்பலும் உள்ளே நுழைந்தது.
இரு ரெளடிக் கும்பல்கள் உள்ளே வருவதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள்வெங்கடேஷ் கோஷ்டியினர், ஜெயக்குமாரை காவல் நிலையத்தில், காவலர்கள் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டித்தள்ளினர். பின்னர் அவர் மீது நாட்டு வெடிகுண்டையும் வீசினர். இதில் ஜெயக்குமார் அங்கேயே இறந்தார்.
வெங்கடேஷ் கும்பலைத் தடுக்க முயன்ற ராஜாராம், முருகேசன் ஆகிய காவலர்களுக்கு காலில் வெட்டு விழுந்தது. பின்னர்அக்கும்பல் தப்பிச் சென்று விட்டது.
காவல் நிலையத்தில் வைத்தே இந்த பயங்கர படுகொலை நடந்தது முதலியார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு முன்பு திரண்டு வந்து காவல் நிலையத்திலேயே கொலை நடக்கும்அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக் கிடப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்திகலைந்து போகச் செய்தனர்.
புதுவை தெற்கு மாவட்ட பகுதியில் உள்ள 10 பெரிய ரெளடிகள் பட்டியலில் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரதுபெயர்கள் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தீவிரதேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications