தமிழகத்தில் எடுபடாத இந்தியா ஒளிர்கிறது கோஷம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

என்.டி.டி.வி-இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்தியாவில் நல்லாட்சி நிலவி, நாடே ஒளிர்கிறதா என்றகேள்விக்கு 55 சதவீத மக்கள் ஆம் என பதில் தந்துள்ளனர். இல்லை என்று 26 சதவீதத்தினரும், 19 சதவீதத்தினர் கருத்துத்தெரிவிக்க மறுத்தும் உள்ளனர்.

பட்டினிச் சாவுகளுக்குப் பெயர் போன ஒரிஸ்ஸாவில் கூட பா.ஜ.கவின் feel good factor க்கு ஆதரவு உள்ளது. நாடு ஒளிர்வதாகபா.ஜ.க. சொல்வதை ஒரிஸ்ஸா மக்களும் ஏற்கின்றனர்.

ஆனால், இதில் எந்த விஷயமும் தமிழகத்தைப் பொறுத்தவரை செல்லவில்லை. இங்கே வாஜ்பாய் அலை, இந்தியா ஒளிர்கிறதுபோன்ற கோஷங்கள் எடுபடவே இல்லை. தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாநில அரசும் மத்திய அரசும்தவறிவிட்டதாகவே தமிழக மக்கள் கருதுகின்றனர்.

இது நாடாளுமன்றத்துக்கான தேர்தலாக இருந்தாலும் மாநிலப் பிரச்சனைகளை வைத்தே தமிழக மக்கள் வாக்களிக்க உள்ளனர்என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் நாடு முழுவதும் பா.ஜ.க. மேற்கொண்ட விளம்பரங்களுக்கு தேசிய அளவில் நல்ல பலன்கிடைத்தாலும், தமிழகத்தில் அது கண்டுகொள்ளப்படவே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+