ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தொடரும்: மதிமுக தேர்தல் அறிக்கை
கோவை:
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு மதிமுகவின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும். இதற்கு எந்தத் தடை வந்தாலும் அதைக் கண்டுபயப்பட மாட்டோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அக் கட்சியின் அறிக்கையை கோவையில் வைகோ வெளியிட அதை திருப்பூர் துரைசாமி பெற்றுக்கொண்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய பகுதிகள்:
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, தெற்காசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும்தமிழர்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான தனது நிலையை இந்தியா மாற்றிக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவும் முக்கியப் பங்களிக்க வேண்டும்.
இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத பல நாடுகள் இலங்கையில் காலூன்ற நினைக்கின்றன. எனவே தனது சொந்த பாதுகாப்பைக்கருத்தில் கொண்டாவது, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.
சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற இலங்கை முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை எப்பாடுபட்டாவதுநிறைவேற்ற மதிமுக பாடுபடும்.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களால் மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியாவே கைவசப்படுத்தமத்திய அரசை வற்புறுத்துவோம்.
மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை நீக்க வேண்டும், தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும்,செம்மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications