மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும்: காங்கிரசுக்கு படுதோல்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசிய அபிரணாய் ராயும் குழுவினரும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 207 தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 3 சட்டசபைத் தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர்.

அதன்படி கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகள்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி: 287 முதல் 307 வரை
இதில் பா.ஜ.க. மட்டும் 190-200 வரை வெல்லும்

காங்கிரஸ் கூட்டணி: 143 முதல் 163 வரை.
இதில் காங்கிரஸ் மட்டும்: 95- 105 வரை வெல்லும்

இரு கட்சிகளுடன் கூட்டணி அமைக்காத மற்ற கட்சிகளுக்கு: 90 முதல் 100 வரை கிடைக்கும்

சிறந்த பிரதமர் யார்?:

இதுவரை இருந்த இந்தியப் பிரதமர்களில், சிறந்த பிரதமர்கள் யார் என்றும் கேள்வி வைக்கப்பட்டது.

இதில் வாஜ்பாய்க்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தை ஜவஹர்லால் நேரு, இரண்டாவது இடத்தை இந்திராகாந்தி, மூன்றாவது இடத்தை ராஜீவ் காந்தி ஆகியோர் தட்டிச் சென்றுள்ளனர்.

நேருவுடன் ஒப்பிடுகையில் வாஜ்பாய்க்கு 26 சதவீத மதிப்பெண் கிடைத்துள்ளது. இந்திராவுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதமும்,ராஜீவ் காந்தியுடன் ஒப்பிடுகையில் வாஜ்பாய்க்கு 46 சதவீதமும் ஆதரவு உள்ளது.

ஆனால், நரசிம்மராவிடம் ஒப்பிடுகையில், ராவை விட வாஜ்பாய் சிறந்தவர் என்று 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அத்வானிக்கு ஆதரவு:

வாஜ்பாய் பிரதமர் பதவிக்கு வராவிட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அத்வானிக்கே எங்களது வாக்கு என்று 38சதவீதம் பேரும், சுஷ்மா சுவராஜுக்கு என்று 10 சதவீதம் பேரும், பிரமோத் மகாஜன் என்று 4 சதவீதத்தினரும், அருண் ஜெட்லிக்கு2 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சோனியா காந்தி பிரதமராகாவிட்டால் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு பியங்காவுக்கு 18 சதவீதம் பேரும்,மன்மோகன் சிங்குக்கு 15 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு9 சதவீதம் பேரும் 99, நரசிம்ம ராவுக்கு 8 சதவீத மக்களும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

எம்.பிக்கள் மீது காட்டம்:

தற்போதைய எம்.பிக்கள் மீது மக்கள் மகா காட்டமாக இருக்கிறார்கள் என்பதும் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

தங்களது தொகுதி எம்.பிக்கள் தேர்தலில் ஜெயித்த பிறகு தொகுதிக்கே வந்ததில்லை என்று 38 சதவீதம் பேர் குற்றம்சாட்டியுள்ளனர். வருடத்திற்கு ஒரு முறைதான் எம்.பிக்கள் வருவதாக 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எப்போதாவது வருவார்கள்என்று 11 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மொத்தத்தில், மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எம்.பிக்கள் வெற்றி பெறுவது தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்கதையாகத்தான் இருக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+