காலார "நடந்துக்கினே" பிரசாரம்!
சென்னை:
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலு தனது தேர்தல் பிரசாரத்தை பல வழிகளிலும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டையாடிய அவர் தற்போது சென்னை நகருக்குள் நுழைந்துள்ளார். திமுகதொண்டர்கள் புடை சூழ ஒவ்வொரு பகுதியாக அவர் வலம் வந்து கொண்டுள்ளார்.
இந் நிலையில் சென்னையின் முக்கியப் பகுதியான மெரீனா கடற்கரையில் வாக்கிங் சென்றவாறே பிரசாரம் செய்தார் பாலு. டி சர்ட்,டிராக் சூட் சகிதம் தொண்டர்கள் புடை சூழ மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியிலிருந்து அண்ணா சமாதி வரைநடந்து கொண்டே பிரசாரம் செய்தார்.
காலையில் ஜாகிங் வந்தவர்கள், வாக்கிங் வந்தவர்களுடன் ஜாலியாக பேசியவாறு அவர் வாக்கு சேகரித்தது பொதுமக்களின்வரவேற்பைப் பெற்றது. பலர் ராணி மேரிக் கல்லூரியைக் காப்பாற்றியதற்காக பாலுவுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்துஅமைச்சர் பதவியை வகித்திருக்க வேண்டும் என்றும் சிலர் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டனர்.
டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பதை அறிந்த பலரும் அங்கு வந்து அவருடன் கை குலுக்கிச் சென்றனர். இதேபோல, சில நாட்களுக்குமுன்பு பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை பகுதியிலும், திருவான்மியூர்-கொட்டிவாக்கம் கடற்கரைப் பகுதியிலும் வாக்கிங்சென்றவாறே வாக்கு சேகரித்தார் டி.ஆர்.பாலு.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications