கருணாநிதியின் கோபம் புரியவில்லை: இல.கணேசன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திமுக தலைவர் கருணாநிதியின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:
தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி தராததால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கருணாநிதி விலகியதாகஜெயலலிதா குற்றம் சாட்டியதற்காக கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தயாநிதிக்கு அமைச்சர் பதவி கேட்டார்களாஎன்பது தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் கருணாநிதியின் கோபத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஜெயின் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையைவெளியிட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதி மீது பலவகையில் குற்றம் சாட்டினார். அப்போது அவர்களுக்கு எதிராகவக்கீல் நோட்டீஸ் அனுப்பாத கருணாநிதி இப்போது மட்டும் அனுப்புவது ஏன்?
கருணாநிதியின் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
பிரதமர் வாஜ்பாயைக் குறை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கருணாநிதிக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தெரியும். அதனால்தான் வாஜ்பாய்க்கும், துணைப் பிரதமர் அத்வானிக்கும் இடையே பிளவுஏற்படுத்த முயல்கிறார்கள்.
காவேரி நீர் தொடர்பாக ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கிறார் பாமக தலைவர் ராமதாஸ். இப்போது வைத்துள்ள கூட்டணிமூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காவிரி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட சொல்ல வேண்டியது தானேஎன்று கூறினார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications