40 நாள் ஈராக் குழந்தைக்கு சென்னையில் இருதய அறுவைச் சிகிச்சை
சென்னை:
பிறந்து 40 நாட்களே ஆன ஈராக் குழந்தைக்கு சென்னையில் உள்ள "மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்" மருத்துவமனையில் இருதயஅறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சமீபத்தில் ஈராக்கைச் சேர்ந்த 19 குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள சர்வதேச இருதய நோய் சிகிச்சைக்கான மருத்துவனையில்இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. முற்றிலும் குணமடைந்த நிலையில் அந்தக் குழந்தைகள் ஈராக் திரும்பிச் சென்றனர்.
இந் நிலையில் மேலும் ஒரு ஈராக் குழந்தைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இருதயஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிறந்து 40 நாட்களே ஆகும் இந்தக் குழந்தையின் பெயர் அலி சமி சாத். ஈராக் தலைநகர்பாக்தாத் நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹில்லா என்ற ஊரைச் சேர்ந்த ஏழை நகைக் கடைத் தொழிலாளியின்மகன்தான் அலி சமி சாத்.
பிறந்தது முதல் அழும்போதெல்லாம் குழந்தையின் உடல் நீல நிறம் அடைவதைப் பார்த்த அவனது தாயார், பாக்தாத் நகரில்உள்ள சதாம் உசேன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காட்டியுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள்,மூளைக்கு வழக்கமாகச் செல்லும் சுத்த ரத்தத்திற்குப் பதில் அசுத்த ரத்தம் செல்வதால்தான் உடல் நீல நிறம் அடைவதாககண்டுபிடித்தனர்.
ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியைச் செய்யும் இருதயத்தில் உள்ள ஒரு பகுதியில் பிரச்சினை இருப்பதையும் உணர்ந்தனர். அதை சரிசெய்யும் வசதி ஈராக்கில் இல்லை. இதையடுத்து தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் சென்னை மெடிக்கல் மிஷன் மருத்துவமனைகுறித்துத் தெரிந்து கொண்டு இங்கு வந்துள்ளனர். குழந்தையுடன், அவனது தாயார், சதாம் உசேன் மருத்துவனை டாக்டர் ஹூகைர்மக்மூத் ஆகியோரும் உடன் வந்துள்ளனர்.
அலி சாத்துக்கு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டது. சுமார் 6 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.
பொதுவாக பிறந்த 4 வாரங்களுக்குள் இந்த அறுவைச் சிகிச்சையை செய்வார்களாம். ஆனால் டாக்டர் மக்மூத் மேற்கொண்ட சிலஅவசர நடவடிக்கைகள் காரணமாக இந்த அறுவைச் சிகிச்சையை தாமதமாக மேற்கொள்ள முடிந்தது என்று சென்னை டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
தற்போது அலி சாத் நலமுடன் இருப்பதாகவும், நீல நிற பிரச்சினை தற்போது இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 31ம்தேதி அலி சாத் மீண்டும் ஈராக் திரும்புகிறான்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications