ஜெவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் கருணாநிதி
சென்னை:
தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு அது கிடைக்காத காரணத்தால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்துதிமுக விலகியது என்று அவதூறாகக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுகதலைவர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது தொடர்பாக ஜெயலலிதா சில கருத்துக்களை சமீபத்தில்தெரிவித்திருந்தார். முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர், அவரது மகன் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் கேட்டதாகவும், அதை வாஜ்பாய் மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்துகூட்டணியிலிருந்து விலக கருணாநிதி முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதை பா.ஜ.க. தமிழக பிரிவு பொதுச் செயலாளர் குமாரவேலுவும் உறுதிப்படுத்தி பேட்டி அளித்தார். இதற்குக் கடும் கண்டனம்தெரிவித்த கருணாநிதி இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சார்பில் வழக்கறிஞர் வில்சன் என்பவர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு கருணாநிதியிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய், வேறு அமைச்சராக யாரை நியமிப்பது என்றுகேட்டபோது, பின்னர் கூறுவதாக மட்டுமே கருணாநிதி பதிலளித்திருந்தார்.
அதேபோல, சென்னைக்கு வந்து தன்னைச் சந்தித்த வெங்கையா நாயுடுவிடம் இதே பதிலைத்தான் கருணாநிதி கூறியிருந்தார்.
உண்மை இவ்வாறிருக்க திமுக தலைவர் கருணாநிதியின் புகழையும், பெயரையும் குலைக்கும் விதமாகவும், அவருக்கு அவதூறுஏற்படுத்தும் விதமாகவும் கூறியுள்ள கருத்துக்கள் தேர்தலில் வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயேகூறப்பட்டவை.
இந்த அவதூறான குற்றச்சாட்டுக்கு பகிரங்கமாக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல, நோட்டீஸ் குமாரவேலுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications